வீட்டில் சமையல் செய்யும் போதோ, துணி அயர்ன் செய்யும் போது, அல்லது குளிக்கும் போது சுடு தண்ணீர் தவறுதலாக கொட்டுவது போன்ற தருணங்களில் நாம் எதிர்பாராமல் தீக்காயம் அடைவது சாதாரணமானது. உடனே கடும் வலியும் பதட்டமும் ஏற்படும். சில நிமிடங்களில் தோல் சிவந்து கொப்பளித்து, தாங்க முடியாத வலி உருவாகும்.
தோல் காயங்களில் பல வகைகள் உள்ளன:
* முதல் டிகிரி (First Degree): மேற்புறத் தோலை மட்டும் பாதிக்கும்.
* இரண்டாம் டிகிரி (Second Degree): தோலின் மேலடுக்கு மற்றும் சில ஆழப் பகுதிகள் பாதிக்கும்.
* மூன்றாம் டிகிரி (Third Degree): தோலின் அனைத்து அடுக்குகளையும் தீவிரமாக பாதிக்கும்.
* நான்காம் டிகிரி (Fourth Degree): தோலை மட்டுமல்லாமல் தசை மற்றும் எலும்பு வரை பாதிப்பை ஏற்படுத்தும்.
சிறிய தீக்காயங்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் முறைகள்:
உருளைக்கிழங்கு சிகிச்சை: உருளைக்கிழங்கு சிறிய தீக்காயங்களுக்கு விரைவான நிவாரணம் அளிக்கும். இது ஆண்டி-இன்ஃபிளமடோரி (Anti-inflammatory) பண்புகளைக் கொண்டது.
- ஒரு மெல்லிய துண்டு உருளைக்கிழங்கை வெட்டி, காயம் பட்ட இடத்தில் மெதுவாக தேய்க்கவும்.
- சாறு முழுமையாக பரவியிருக்குமா என உறுதி செய்யவும்.
- மாற்றாக துருவிய உருளைக்கிழங்கை 15 நிமிடங்கள் வைத்திருக்கலாம்.
- காயம் ஏற்பட்ட உடனே இதைச் செய்வது சிறந்த பலன் தரும்.
அலோவேரா (கற்றாழை): கற்றாழை தோலுக்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து. இது ஆண்டி-ஃபங்கல் பண்புகளை கொண்டுள்ளது. திசு குணப்படுத்தும் (Tissue healing), ஆண்டி-பாக்டீரியல் மற்றும் ஆண்டி-ஃபங்கல் பண்புகளை கொண்டுள்ளது. அலோவேரா சாறு தோலை குளிர்வித்து, தொற்றைத் தடுக்கும். குறிப்பாக கதிர்வீச்சு சிகிச்சையால் (Radiation therapy) ஏற்படும் காயங்களுக்கும் இது பயனுள்ளதாகும்.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் சிறிய தீக்காயங்களுக்கு சிறந்த மாய்ஸ்சரைசராக (Moisturizer) செயல்படுகிறது.
- இதில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் வைட்டமின் E தோலை நன்கு பசுமையாக வைத்திருக்கும்.
- குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்து குளிர்ந்த எண்ணெயை காயம் மீது மெதுவாக தடவலாம்.
- இது தோலின் வறட்சியை குறைத்து, நமைச்சல் மற்றும் அரிப்பைத் தடுக்கிறது.
தேன்:
- தேன் இயற்கையான ஆன்டி-பாக்டீரியல் மருந்தாகும்.
- இது தோலின் அழற்சியையும் வலியையும் குறைக்கிறது.
- ஸ்டெஃபிலோகோக்கஸ் ஆரியஸ் போன்ற நோய்க்கிருமிகளை அழிக்க உதவுகிறது.
- ஒரு பருத்தித் துணியில் தேன் பரவி, காயம் பட்ட இடத்தில் வைத்து தினமும் 3–4 முறை மாற்றி பயன்படுத்தலாம்.
Read more: குட்நியூஸ்..! இனி வேலை மாறினால் PF பரிமாற்றம் தானாகவே நடக்கும்: புதிய PF விதிகள்!



