தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் சத்திருப்பள்ளி மசூதி சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் கவுஸ் (28). ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்த இவர், சுமார் 8 வருடங்களுக்கு முன் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் குடும்பத்துடன் சத்யம்பேட்டை கிராமத்திற்கு இடம் பெயர்ந்த கவுஸ், அங்கு விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
சத்யம்பேட்டையில் வசித்து வந்தபோது, கவுஸ் மனைவிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நெருக்கமான கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் கவுஸுக்கு தெரியவந்தபோது, அவர் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், கவுஸ் அந்த இளம் தம்பதியரை பிடித்து, குடும்பத்தினரிடம் சம்மதம் வாங்கினார்.
அதைத் தொடர்ந்து, தன் மனைவிக்கு அவரது கள்ளக்காதலனுடன் பாரம்பரிய முறைப்படித் திருமணம் செய்து வைக்கும் முடிவை அவர் எடுத்தார். தன் மனைவியை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்த இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஷேக் கவுஸ் கடுமையான மன அழுத்தத்தில் தவித்துள்ளார். இந்த சூழலில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு வீடியோ கால் மூலம் தனது மனநிலையை எடுத்துரைத்த கவுஸ், அதன் பின்னர் தற்கொலை செய்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், அவரது உடலை மீட்டு சத்திருப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் மறுமணம் மற்றும் தந்தையின் தற்கொலை காரணமாக, 3 குழந்தைகளும் பரிதவித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : உங்கள் வீட்டில் ஏசி இருக்கா..? குளிர்காலத்தில் ஹீட்டராக கூட மாற்றலாம்..!! இந்த டிப்ஸை தெரிஞ்சிக்கோங்க..!!



