தினமும் காலையில் துளசி நீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்..!! இத்தனை பிரச்சனைகளுக்கு அருமருந்து..!!

Thulasi Water 2025

பொதுவாக மழைக்காலத்தில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, சளி, இருமல், காய்ச்சல் போன்ற பருவகால நோய்கள் ஏற்படுவது இயல்பு. நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதை விட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதே சிறந்தது. அந்த வகையில், மழைக்கால நோய்களை தடுத்து, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில், துளசி நீர் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது என்று இயற்கை மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


காலையில் துளசி நீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் :

தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி நீரைப் பருகுவது, உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: துளசி நீர், பருவகால நோய்களைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ரத்த சர்க்கரை கட்டுப்பாடு: துளசி, இன்சுலின் சென்சிட்டிவிட்டியை (Insulin Sensitivity) மேம்படுத்த உதவுகிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவு நிலையாகப் பராமரிக்கப்படுகிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சுவாசமும் செரிமானமும்: துளசி நீர் சளியை நீக்குவதன் மூலம் சுவாசப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. அத்துடன், அசிடிட்டி, வாயு மற்றும் உப்புசம் (Bloating) போன்ற செரிமானப் பிரச்சனைகளையும் குறைத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சருமப் பொலிவு மற்றும் மன அமைதி: துளசி நீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, சருமத்திற்குப் பளபளப்பைக் கொடுக்கின்றன. மேலும், முகப்பரு போன்ற பிரச்சனைகள் குறையவும் வழிவகுக்கின்றன. துளசியில் நரம்புகளை அமைதிப்படுத்தும் பண்பு காணப்படுவதால், இது மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையைச் சீராக்குகிறது. இதன் விளைவாக, நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும்.

துளசி நீர் தயாரிப்பது எப்படி..?

சுமார் 7 முதல் 10 ஃப்ரெஷ்ஷான துளசி இலைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து, அது பாதியாகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை வடிகட்டி, சூடாகப் பருகலாம். சுவை மற்றும் கூடுதல் பலன்களுக்காகச் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

துளசி நீர் பொதுவாகப் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், அதை மிதமான அளவில் எடுத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக, ஏதேனும் மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வோர், துளசி நீரை எடுத்துக்கொள்வதற்கு முன் தங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது.

Read More : உங்கள் வீட்டில் ஏசி இருக்கா..? குளிர்காலத்தில் ஹீட்டராக கூட மாற்றலாம்..!! இந்த டிப்ஸை தெரிஞ்சிக்கோங்க..!!

CHELLA

Next Post

சென்னையில் பிங்க் நிற ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் பறிமுதல் செய்யப்படும்.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!

Sat Nov 8 , 2025
பெண்களின் பாதுகாப்பையும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு “பிங்க் ஆட்டோ திட்டத்தை” சென்னை நகரில் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், பெண்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் தாங்களே ஆட்டோ ஓட்டி வருமானம் ஈட்டலாம். அரசு, ஆட்டோ வாங்குவதற்காக 40% வரை மானியம் வழங்குகிறது. மேலும், பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் மற்றும் இலவச ஓட்டுநர் பயிற்சி […]
pink auto

You May Like