கோவை விமான நிலையம் அருகே கடந்த 2-ம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், 3-ம் தேதி நள்ளிரவில் அந்த 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி, தப்ப முயன்ற போது, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். காலில் குண்டு அடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கோவை ஜெ.எம்.2 நீதிபதி அப்துல் ரகுமான் மருத்துவமனைக்குச் சென்று, சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில், மூவரையும் வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவியிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் கோவை இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடிகை கஸ்தூரி சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ ஒரு டீனேஜ் மகளின் தாய் நான்.. நேரங்கெட்ட நேரத்தில் வெளியில் சுற்றக் கூடாது. இளம்பெண்கள், இளைஞர்கள் கொஞ்சம் பொது அறிவோடு இருக்க வேண்டும்.. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. அது எந்த நோக்கமாக இருந்தாலும் சரி.. அது காதலாக இருக்கட்டும்.. இரவு நேரத்தில் தேவையில்லாத இடங்களுக்கு போவது நல்லது..
பேசணும் என்று சொன்னால் எதற்கு எவ்வளவோ பாதுகாப்பான இடங்கள் உள்ளது.. அங்கு சென்று பேசலாமே? வெளியில் சென்று ஏன் பேச வேண்டும்.. ஒருவேளை தவிர்க்க முடியாது.. பேசியே ஆக வேண்டும் என்று ரூம் போட்டு பேசுங்கள்… பெண் மட்டுமே இரவு நேரத்தில் வெளியே செல்லக் கூடாது என்று நான் சொல்லவில்லை.. ஆண்களும் வெளியே செல்லக்கூடாது.. இன்று நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை.. இது சிங்கப்பூர் இல்லை. இது சிங்கப்பூர் ஆகுற வரைக்கு உங்கள் பாதுகாப்பை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்..” என்று தெரிவித்தார்..
Read More : “இதை செய்தால் விஜய்யின் அரசியல் வாழ்க்கையே ஜீரோவாகி விடும்..” எச்சரிக்கும் மூத்த பத்திரிகையாளர்!



