fbpx

ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை..!! கவனமா இருங்க..!! கேரளாவில் தீவிரமடையும் கொரோனா..!!

கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக தினசரி பாதிப்பு 10-ஆக இருந்த நிலையில், நேற்று (டிச.13) ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா உறுதி பாதிப்பு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 949-ஆக அதிகரித்துள்ளது. கேரள சுகாதாரத்துறை தரவுகளின்படிம் கடந்த திங்கட்கிழமை மட்டும் 11,700 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வந்ததில், 170 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு தினசரி 1.20 லட்சம் பேர் தரிசனத்துக்காக சென்று கொண்டிருப்பதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் சுமார் 12 மணிநேரம் நெரிசலில் காத்திருக்கும் சூழல் நிலவுவதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், சபரிமலைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் செல்வதால், அவர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

'அக்டோபர் மாத மின் கட்டணத்தையே செலுத்துங்க’..!! ’அப்படினா பில் எகிறுமே’..!! அதிர்ச்சியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள்..!!

Thu Dec 14 , 2023
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் டிசம்பர் மாத மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் அக்டோபர் மாத மின் கணக்கீட்டின்படி […]

You May Like