ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் லலிதா தேவி (30). இவரது மாமியார் மகாலட்சுமி (63). சம்பவத்தன்று, லலிதா தேவி தனது மாமியாரிடம், “நாமொரு விளையாட்டு விளையாடலாம்” என்று கூறி, அவரது கண்களை ஒரு துணியால் கட்டியுள்ளார். இதை நம்பிய மகாலட்சுமி அவ்வாறே அமர்ந்திருக்க, லலிதா தேவி சற்றும் எதிர்பாராத விதமாக அவர் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார். இதனால் மகாலட்சுமி உடல் முழுவதும் தீக்காயங்களுக்கு ஆளாகி, பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்தன்று லலிதா தேவி, இது மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து என்றும், அதில் தான் மாமியார் உயிரிழந்ததாகவும் நாடகமாடியுள்ளார். இருப்பினும், போலீஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
மேலும், லலிதாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, அவர் யூடியூப் தளத்தில் “கொலையை விபத்தாக மாற்றுவது எப்படி?” (How to turn a murder into an accident) என்பது போன்ற வார்த்தைகளை தேடியிருப்பது தெரியவந்தது. இந்தக் கொடூரச் செயலை திட்டமிட்டுச் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, போலீஸார் லலிதா தேவியைக் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : நிலைமை ரொம்ப மாறிப்போச்சு..!! மருத்துவத் துறைக்கே சவால்..!! மக்களே இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்..!!



