Breaking : இன்று ஒரே நாளில் 2 முறை உயர்வு.. மாலையும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

jewels

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. எனினும் கடந்த வாரத் தொடக்கத்தில் முன் தினம் ரூ.3,000 விலை குறைந்த நிலையில், பின்னர் மீண்டும் 3000 வரை உயர்ந்தது.. குறிப்பாக காலையில் குறைவதும் மாலையில் அதிரடியாக உயர்வதும் என தங்கம் விலை ஆட்டம் காட்டி வந்தது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை, மாலை என ஒரே நாளில் 2 முறை ஆபரணத் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.110 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.70 உயர்ந்து ரூ.11,480க்கு விற்பனையாகிறது. இதனால் இன்று காலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த தங்கம் விலை மாலையில் ரூ.560 உயர்ந்து ரூ.91,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இன்று ஒரே நாளில் ரூ.1,140 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று மாலையும் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது… ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து 169க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,69,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : ஆட்டோ பே வசதியை யூஸ் பண்றீங்களா? RBI-ன் புதிய விதிகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!

RUPA

Next Post

புதனின் வக்ர பெயர்ச்சி.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடுத்த 20 நாட்கள் மோசமானதாக இருக்கும்..!

Mon Nov 10 , 2025
Mercury's transit.. The next 20 days will be bad for these 4 zodiac signs..!
Mercury Transit zodiac 1

You May Like