fbpx

சனி பகவானின் ஆட்டம் ஆரம்பம்.! ஏழரை சனி ஆரம்பமாக உள்ள ராசிகள்.! அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசிகள்.!

குரு மற்றும் சனி பகவானின் இடப்பெயர்ச்சியால் ராசிகளின் பலன்களும் அதிர்ஷ்டங்களும் மாறி மாறி வருகிறது. பஞ்சாங்கங்கள் அடிப்படையில் டிசம்பர் 20 சனி பகவான் இடப்பெயர்ச்சியாக இருக்கிறார். இந்த இடம் பெயர்ச்சி சில ராசிகளுக்கு அடுத்து இரண்டு வருடங்களுக்கான அதிர்ஷ்ட கதவை திறக்கப் போவதாக திருவாக்கிய பஞ்சாங்கம் கணித்து இருக்கிறது.

சனி பகவானின் இந்த பெயர்ச்சியால் முதலில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க இருக்கிறது. இந்த ராசியில் சனிபகவான் லாப ஸ்தானத்தில் பயணிக்க இருக்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் புதிய தொழில் வாய்ப்புகளும் தேடி வரும். குடும்பக் கருத்து வேறுபாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு வரும். சிம்ம ராசிக்காரர்களுக்கு சனிபகவான் ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இது அவர்களுக்கு வன அதிர்ஷ்டத்தை கொட்ட இருக்கிறது. மேலும் குடும்பம் மற்றும் காதல் ரீதியாக சில கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் தொழில் மற்றும் வேலைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவு மற்றும் உயர் பதவிகள் தேடி வரும்.

துலாம் ராசியினருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார் சனி பகவான். இவற்றால் துலாம் ராசியினருக்கு பல நன்மைகள் தேடிவரும். நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். முதலீடு செய்தால் லாபம் இரட்டிப்பாகும். எனினும் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. டிசம்பர் 20ஆம் தேதி சனிபகவானின் இடப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சிக்கான திருவிழா கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. மேலும் இந்த இடப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் மற்றும் மீன ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாக இருக்கிறது.

Next Post

இட்லியோட பூர்வீகம் தெரியுமா.!2000 ஆண்டு பழமையான வரலாறு தெரிஞ்சிக்கலாம் வாங்க.?

Fri Dec 15 , 2023
இட்லி என்பது தென்னிந்தியாவில் பிரத்தியேகமான காலை உணவாக இருந்து வருகிறது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரின் விருப்பமான பிரேக் ஃபாஸ்ட்டாக இருப்பது இட்லி. இந்த இட்லியை தென்னிந்தியாவின் பாரம்பரியமான உணவு மற்றும் அடையாளமாக இருந்து வந்தாலும் இதன் பூர்வீகம் இந்தியா கிடையாது என்றால் நம்ப முடிகிறதா.? இட்லி எங்கிருந்து வந்தது.? அதன் பாரம்பரியம் என்ன.? ஆகியவற்றைப் பற்றிய வரலாற்று செய்திகளை இங்கு அறிந்து கொள்வோம். நாம் சுவையாக […]

You May Like