கோழி இறைச்சி பொதுவாக அதிகப் புரதச்சத்து இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது என்று கருதப்பட்டாலும், அதை சமைக்கும் விதம் சில தீவிரமான உடல்நல அபாயங்களை உண்டாக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, பலரும் விரும்பி சாப்பிடும் தந்தூரி (Tandoori) மற்றும் கிரில் (Grill) முறையில் சுடப்படும் சிக்கன் வகைகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கோழியை தந்தூரி அல்லது கிரில் முறையில் தயாரிக்கும்போது, அது நெருப்பில் நேரடியாக சுடப்படுகிறது. இவ்வாறு அதிக வெப்பத்தில் சமைக்கப்படும்போது, இறைச்சியின் மேல் உருவாகும் கருப்புப் படிவத்தில் ‘நைட்ரோசமைன்’ (Nitrosamine) என்ற ரசாயனம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நைட்ரோசமைன் ரசாயனம், உணவுக் குழாய், இரைப்பை மற்றும் பெருங்குடல் போன்ற பகுதிகளில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய காரசினோஜென் வகையை சேர்ந்தது என்று கருதப்படுகிறது.
உணவியல் நிபுணர்கள் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, அதிக வெப்பநிலையில் இறைச்சியை சமைக்கும்போது, நைட்ரோசமைன் மட்டுமின்றி, ‘ஹெட்டோரோசைக்ளிக் அமீன்கள் (HCAs)’ மற்றும் ‘பாலிசைக்ளிக் அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs)’ போன்ற வேறு சில புற்றுநோய் காரணிகளும் உருவாகின்றன.
எனவே, தந்தூரி அல்லது கிரில் போன்ற நேரடியாகச் சுடப்படும் சிக்கன் வகைகளைத் தவிர்த்துவிட்டுச் சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆபத்தை குறைக்க நீங்கள் செய்ய வேண்டியவை :
* கோழி இறைச்சியை நேரடியாக நெருப்பில் சுடுவதற்கு பதிலாக, வேக வைத்தோ (Boiling), ஆவியில் சமைத்தோ (Steaming), அல்லது மெதுவாக சமைக்கும் (Slow Cooking) முறைகளை பின்பற்றுவது பாதுகாப்பானது.
* தவிர்க்க முடியாத சூழலில் கிரில் சிக்கன் சாப்பிட்டால், அதன் மேல் உருவாகும் கருப்பு அல்லது கருகிய பகுதிகளை நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது.
* கோழி இறைச்சி நல்ல புரதத்தை தந்தாலும், வாரத்திற்கு மிதமான அளவில் மட்டுமே உட்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
Read More : சாப்பிட்ட உடனே மோசமான இந்த 5 விஷயங்களை மட்டும் பண்ணிடாதீங்க..!! ஆபத்து வருவது கன்ஃபார்ம்..!!



