2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. எனினும் கடந்த வாரத் தொடக்கத்தில் முன் தினம் ரூ.3,000 விலை குறைந்த நிலையில், பின்னர் மீண்டும் 3000 வரை உயர்ந்தது.. குறிப்பாக காலையில் குறைவதும் மாலையில் அதிரடியாக உயர்வதும் என தங்கம் விலை ஆட்டம் காட்டி வந்தது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. ஆனால் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,140 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்..
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.220 உயர்ந்து, ரூ.11,700க்கு விற்பனையாகிறது. இதனால் இன்று காலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.93,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
அதே போல் இன்று மாலையும் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது… ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.170க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..
Read More : சென்னை மக்களே… இன்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான முகாம்…! மிஸ் பண்ணிடாதீங்க…



