கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாதம் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவுக்கு கன்னியாகுமரி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் செல்வார்கள்.
இந்நிலையில், சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் மார்கழி திருவிழாவின் முக்கிய நளான தேர்த்திருவிழாவை முன்னிட்டு வரும் 26ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 26ஆம் தேதியை ஈடுசெய்யும் வகையில், 2024 ஜனவரி மாதம் 3-வது சனிக்கிழமை (ஜனவரி 20) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்” என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.