பெருவில் பெரும் சோகம்!. பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 37 பேர் பலி!. பலர் படுகாயம்!

peru bus crash

பெருவில் பிக்கப் டிரக் மீது பேருந்து மோதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.


லாமோசாஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் பேருந்து ஒன்று, காரவேலி மாகாணத்தில் உள்ள சாலா என்ற நகரத்திலிருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரேக்விபாவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பெரு மற்றும் சிலியை இணைக்கும் பனமெரிக்கானா சுர் நெடுஞ்சாலையில் வளைவு ஒன்றில் திரும்பும்போது எதிரே வந்த பிக்கப் டிரக் மீது மோதியதில் பேருந்து அருகில் இருந்த 200 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 37 பேர் பலியாகினர்.

விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கு விரைந்தனர். மீட்புப் பணிகளில் இறங்கிய அவர்கள் இடிபாடுகளில் இருந்த 37 சடலங்களை மீட்டனர். படுகாயம் அடைந்த 26 பேரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பெரு நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லாத சாலைகள், உரிய எச்சரிக்கை அறிவிப்புகள் இல்லாமை ஆகியவற்றால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: உஷார்…! 8 மாவட்டத்தில் மாவட்டத்தில் கனமழை…! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

KOKILA

Next Post

கனிமங்களின் ராயல்டி விகிதங்களை சீரமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது....!

Thu Nov 13 , 2025
பசுமை எரிசக்திக்கு முக்கியமான கிராஃபைட், சீசியம், ரூபிடியம் மற்றும் சிர்கோனியம் கனிமங்களின் ராயல்டி விகிதங்களை சீரமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சீசியம், கிராஃபைட், ரூபிடியம் மற்றும் சிர்கோனியம் ஆகியவற்றின் ராயல்டி விகிதத்தை பின்வருமாறு குறிப்பிட/திருத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. உற்பத்தி செய்யப்படும் தாதுவில் உள்ள சீசியம் உலோகத்தின் மீது விதிக்கப்படும் சீசியம் உலோகத்தின் சராசரி விற்பனை விலையில் ராயல்டி விகிதம் […]
Central 2025

You May Like