டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில், ரேடிசன் ஹோட்டல் அருகே இன்று மற்றொரு வெடிப்பு சம்பவம் நடந்ததாக போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து, சிறிது நேரம் பீதி நிலவியது. இன்று காலை 9:18 மணிக்கு ஒரு பெண்மணி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு மேற்கொண்ட அவர்அருகில் வெடிகுண்டு போன்ற சத்தம் கேட்டதாகக் கூறினார். இந்த புகாரை சரிபார்க்க பல போலீஸ் குழுக்களும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
மஹிபால்பூரில் உள்ள ராடிசன் ஹோட்டல் அருகே “குண்டுவெடிப்பு போன்ற” சத்தம் காலை 9.19 மணிக்கு வந்ததாக தகவல் கிடைத்தது. உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இருப்பினும், முழுமையான சோதனைக்குப் பிறகு, சந்தேகத்திற்கிடமான எந்த நடவடிக்கையோ அல்லது பொருளோ கிடைக்கவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
எனினும் இந்த சத்தத்திற்கான காரணம் பின்னர் அடையாளம் காணப்பட்டது, “தௌலா குவான் நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்தின் பின்புற டயர் வெடித்ததாகவும், அதிலிருந்து சத்தம் வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்..
எனினும் டெல்லி காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், மஹிபால்பூர் பகுதியில் இயல்புநிலை முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தியது.
நவம்பர் 11 அன்று செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே பயங்கர கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.. இதில் 12 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.. இதையடுத்து டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.. இந்த சூழலில், டெல்லியின் மஹிபால்பூரில் இந்த தவறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, “பாதுகாப்பு காரணங்களுக்காக செங்கோட்டை மெட்ரோ நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும்” என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.. எனினும் மற்ற அனைத்து நிலையங்களும் வழக்கம் போல் செயல்படுகின்றன.



