உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டம் சிக்கந்தர் கிராமத்தைச் சேர்ந்த பிங்கி ஷர்மா (33) என்பவருக்கு சிவா என்பவருடன் திருமணமாகி 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இதற்கிடையில், பிங்கி ஷர்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவரும் மாமியாரும் வீட்டில் இல்லாத சமயங்களில், இவர் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.
சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்பு, பிங்கி ஷர்மா தனது கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்தபோது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவரது 6 வயது மகள் அதைப் பார்த்துவிட்டாள். இந்த தகவலை தனது தந்தையிடம் சொல்லிவிடுவாளோ என்று பயந்த பிங்கி ஷர்மா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
கொலைக்குப் பிறகு, குழந்தையினுடைய சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி, அருகில் இருந்த கிணற்றில் வீசியுள்ளனர். பின்னர் வீட்டிற்கு திரும்பிய கணவர் சிவா, மகளை காணாமல் தேடி பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கிணற்றிலிருந்து சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தை மீட்டனர்.
பிரேதப் பரிசோதனை மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளக்காதலை மறைப்பதற்காக தாயே தனது மகளை கொலை செய்த கொடூர செயல் அம்பலமானது. இதனையடுத்து, காவல்துறையினர் பிங்கி ஷர்மா மற்றும் அவரது கள்ளக்காதலனான 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : 40 வயதில் சொந்த வீடு கனவா..? EMI + சேமிப்பு..!! இந்த விஷயங்களை மட்டும் மறந்துறாதீங்க..!!



