இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் India Post Payments Bank (IPPB)-ல் அசிஸ்டண்ட் மேனேஜர் (Assistant Manager) மற்றும் ஜூனியர் அசோசியேட் (Junior Associate) ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது. தேசிய அளவில் மொத்தம் 309 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 17 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு: 20 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் அசோசியேட் பதவிக்கு மட்டும் 32 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி:
* அசிஸ்டண்ட் மேனேஜர் மற்றும் ஜூனியர் அசோசியேட் ஆகிய இரண்டு பதவிகளுக்கும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டபடிப்பை முடித்திருக்க வேண்டும்.
* மேலும், மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
* ஜூனியர் அசோசியேட் பதவிக்கு அஞ்சல் துறை ஊழியர்களில் நிலை 4-இன் அடிப்படையில் பணி செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கு அஞ்சல் துறை ஊழியர்கள் விண்ணப்பிக்க இயலாது.
தேர்வு செய்யப்படும் முறை:
- விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- கிளை வாரியாக (Zone/Branch-wise) ஆட்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
- இந்த ஆட்சேர்ப்பு முறையில் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதார்கள் அதிகரிக்கும் நிலையில், ஆன்லைன் தேர்வு/ குழு கலந்துரையாடல்/ நேர்காணல் ஆகியவை நடத்த வங்கிக்கு உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? ஆர்வமுள்ளவர்கள் அரசு ஊழியர்கள் https://ippbonline.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.12.2025.



