விஜய்யின் தளபதி கச்சேரி பாடல் 44 மில்லியன் பார்வைகளைப் பெற்றதற்கு காரணம் Bots ஆ? YouTube பதில்!

jananayagan song

நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ நவம்பர் 8 அன்று வெளியானது.. இந்த பாடல் வெளியான சில நாட்களில் 4.4 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இந்த அதிவேக பார்வையாளர் எண்ணிக்கை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. சிலர், இப்பாடலின் பார்வை எண்ணிக்கை உண்மையான ரசிகர்களால் அல்லாமல் ஆட்டோமேட்டிக் பாட்கள் (bots) மூலம் உயர்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டனர்.


இதுகுறித்து YouTube நிறுவனம், பார்வை எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் போது பல பரிமாணங்களைப் (parameters) உதாரணமாக, பார்வை நேரம், கணக்கு இயங்குபாடு, மீண்டும் மீண்டும் பார்க்கப்பட்டுள்ளதா, சாதனம், இடம் போன்றவற்றை — மதிப்பீடு செய்கிறதாகவும், “போட் பார்வைகள்” தானாகவே வடிகட்டப்படும் எனவும் தெரிவித்தது.

வெளியானதிலிருந்து வெறும் ஒரு மணி நேரத்திலேயே 30 லட்சம் பார்வைகள் பெற்றது என்கிற ஸ்கிரீன்‌ஷாட் ஒன்றை எக்ஸ் பயனர் பகிர்ந்ததுடன், ‘பாடலின் பார்வை எண்ணிக்கை உண்மையா? அல்லது பாட்டுகள் (bots) மூலமா?’ என்ற விவாதம் தொடங்கியது.

இது குறித்து பலரும் YouTube-இல் இருந்து விளக்கம் கேட்டனர். இதற்கு பதிலளித்த Team YouTube, தங்களது அதிகாரப்பூர்வ ஆதரவு பக்கத்தின் மூலம் விளக்கம் அளித்தது: மேலும் “எங்கள் தளத்தில் வீடியோவுக்கான ‘likes’, ‘views’, ‘subscribers’ போன்ற ஈடுபாட்டு அளவுகளை (engagement metrics) சரிபார்க்கும் சிறப்பு முறைமைகள் உள்ளன. உண்மையான பார்வைகள் மனிதர்களிடமிருந்து வருகிறதா அல்லது கணினி நிரல்களால் (bots) உருவாக்கப்பட்டதா என்பதையும் மதிப்பீடு செய்கிறோம். அதனால் சில நேரங்களில் பார்வை எண்ணிக்கை மந்தமாகவோ அல்லது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவோ தோன்றலாம்.. அது நாங்கள் அவை உண்மையானவையா என்று சரிபார்க்கும் கட்டத்தில் இருப்பதைக் குறிக்கும்,” என YouTube தெரிவித்துள்ளது.

‘தளபதி கச்சேரி’ பாடலின் வேகமான பார்வை எண்ணிக்கையைப் பற்றி எழுந்த சந்தேகத்துக்கு YouTube பதிலளித்து மேலும் “எங்கள் கணக்கீடு உண்மையான மனித பார்வைகளையே கணக்கிடும்; போட் பார்வைகள் தானாகவே நீக்கப்படும்” என்று விளக்கம் அளித்துள்ளது.

‘தளபதி கச்சேரி’ பாடல் வரிகளை ‘அறிவு’ எழுதியுள்ளார். அனிருத், அறிவு மற்றும் விஜய் ஆகியோர் இந்த பாடலை பாடி உள்ளனர்..

‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ஹெச்.. வினோத் இயக்கியுள்ளார். இது நடிகர் விஜயின் து கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகவுள்ளது. விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி டியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

RUPA

Next Post

கணவன் வீட்டில் இல்லாத நேரம்.. 3 குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்..!! கடைசியில் ட்விஸ்ட்..

Thu Nov 13 , 2025
When her husband is not at home.. Woman runs away with a thief, leaving behind 3 children..!
affair running

You May Like