கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.. இந்த சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது..
இந்த நிலையில் தி,நகரில் உள்ள டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கருக்கா வினோத்தை ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 6-வது கூடுதல் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.. மேலும் நீதிபதி சாமிநாதன் முன்பு அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்..
அப்போது ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனது அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாக கூறி தனது காலணியை கழற்றி நீதிபதியை நோக்கி வீச முயன்றார். உடனடியாக சுதாரித்து கொண்ட போலீசார் கருக்கா வினோத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.. இதையடுத்து நீதிபதி, இதுபோன்ற குற்றவாளிகளை நேரடியாக அழைத்து வராமல், காணொளியில் ஆஜர்படுத்த காவல்துறை உத்தரவிட்டார்.. இதனால் நீதிமன்ற வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது..
சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் ஒருவர் செருப்பு வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் தமிழ்நாட்டிலும் அதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது..
Read More : கணவன் வீட்டில் இல்லாத நேரம்.. 3 குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்..!! கடைசியில் ட்விஸ்ட்..



