இன்றைய நவீன உலகில், ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் இயங்குவது என்பது சாத்தியமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்ட இந்த அத்தியாவசியக் கருவியைப் பாதுகாக்க, பலர் பவுச்சுகள் மற்றும் கவர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த முயற்சியில் சிலர் அறியாமலேயே ஒரு ஆபத்தான பழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.
அதாவது, செல்போன் கவரின் உள்ளே ரூபாய் நோட்டுகள், அடையாள அட்டைகள் அல்லது ஏ.டி.எம். கார்டுகளை வைத்து எடுத்துச் செல்வது. இது சிறிய வசதிக்காகச் செய்யப்படும் ஒரு செயல் போலத் தோன்றினாலும், தொழில்நுட்ப நிபுணர்கள் இது மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர்.
சமீபகாலமாக மொபைல் போன்கள் வெடித்த சம்பவங்கள் அதிக அளவில் செய்திகளில் வெளிவந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றிற்கு அதிக வெப்பமே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. செல்போன் கவரில் பணம் வைப்பது இந்தப் பிரச்சனைக்கு ஒரு மறைமுகக் காரணமாக இருக்கலாம் என்பதைப் பலரும் உணர்வதில்லை.
செல்போனை நீண்ட நேரம் பயன்படுத்தும் போதும் அல்லது தொடர்ந்து சார்ஜ் செய்யும் போதும் அது வழக்கத்தை விடச் சூடாகும். இந்நிலையில், ரூபாய் நோட்டுகளில் உள்ள கால்சியம் கார்பனேட் போன்ற வேதிப்பொருட்கள், செல்போனில் இருந்து வெளிப்படும் அதீத வெப்பத்துடன் வினைபுரிந்து, போன் வெடிப்பதற்கான அபாயத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
மொபைல் போன் பயன்பாட்டின்போது உருவாகும் அதிகப்படியான வெப்பம் வெளியேற முடியாமல் கவரில் அடைக்கப்படுகிறது. இதனால் பேட்டரி உள்ளே வெப்பம் சிக்கி, வீக்கமடையவோ அல்லது சில சமயங்களில் வெடிக்கவோ கூடும். பணம் மட்டுமல்லாமல், ஏ.டி.எம். (ATM) அல்லது கிரெடிட் கார்டுகளை செல்போன் கவரில் வைப்பதும் ஆபத்தானது. ஏனென்றால், செல்போனிலிருந்து தொடர்ந்து வெளிவரும் காந்த அலைகள் (Magnetic Waves), கார்டுகளில் உள்ள மாக்னெடிக் ஸ்ட்ரிப் பகுதியைப் பாதித்து, கார்டுகளைச் செயலிழக்கச் செய்யும் அபாயம் உள்ளது.
இந்த சிறிய அலட்சியம், தீ விபத்து அல்லது காயங்கள் போன்ற பெரிய ஆபத்துகளுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது. எனவே, ஸ்மார்ட்போன்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது அவசியம். நிபுணர்கள் கூறுவது என்னவென்றால்: செல்போன் கவரில் எந்தப் பொருளையும் வைக்காதீர்கள். பணம், அடையாள அட்டைகள் மற்றும் கார்டுகளைப் பாதுகாப்பாக வைக்க உங்கள் பர்ஸ் அல்லது தனிப் பாக்கெட்டுகளைப் பயன்படுத்துவதே சிறந்தது. சிறிய வசதிக்காக இத்தகைய பெரிய ஆபத்துகளை நாம் தேட வேண்டாம்.
Read More : உங்கள் வீட்டில் பணம் சேராமல் இருக்க இதுதான் முக்கிய காரணம்..!! இந்த பொருட்களை மாற்றினால் பண மழை கொட்டும்..!!



