முன்னிலையில் NDA கூட்டணி.. விடாமல் துரத்தும் இண்டியா கூட்டணி..! சூடு பிடிக்கும் பீகார் தேர்தல் முடிவு நிலவரம்..

bihar election

நாட்டிலேயே 3-வது அதிக மக்கள் தொகை கொண்ட பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 6 மற்றும் 11ஆம் தேதி என இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு சிறப்பாக நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை சற்று முன் தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தொகுதிவாரியான EVM வாக்குகள் எண்ணப்படும்.


இந்த முறை, பீகார் தேர்தலில் 67% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை எப்போதும் இல்லாத அளவிலான அதிக வாக்குப்பதிவு இது. மேலும், இந்த தேர்தலைப் பொறுத்தவரை எந்தப் புகாரோ, எதிர்ப்போ இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அரசியல் நிலைமையில் வேகமான மாற்றங்கள் பதிவாகின. சமீபத்திய முன்னிலை நிலவரங்களின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 107 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில், மகாகத்பந்தன் 80 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஜன் சுராஜ் கட்சியும் 5 இடங்களில் ஆரம்பகட்ட முன்னிலையைப் பெற்று போட்டியை சுவாரஸ்யமாக்கியுள்ளது.

இருப்பினும், வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரத்திலும் மாறும் என்பதால், யார் வெற்றி பெறுவார்கள் என்பது பிற்பகல் நேரத்தில்தான் தெளிவாகும் என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் மாறும் முன்னிலை நிலவரங்களால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Read more: BEL நிறுவனத்தில் வேலை.. பொறியியல் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு..! உடனே கிளம்புங்க..

English Summary

The NDA alliance is ahead.. the India alliance is chasing..! 243 seats.. What is the current situation..?

Next Post

Flash : நகைப்பிரியர்கள் கவனத்திற்கு.. தங்கம் விலை மீண்டும் குறைவு.. இன்றைய நிலவரம் இதோ..!

Fri Nov 14 , 2025
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
gold jewlery

You May Like