SA கேப்டனை உருவ கேலி செய்த பும்ரா!. வைரல் வீடியோ!. ரசிகர்கள் கொந்தளிப்பு!

bavuma bumrah

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமாவை பும்ரா உருவ கேலி செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடப்பு டெஸ்ட் உலக சாம்பியனான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணி உடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை அன்று கொல்கத்தாவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ரிக்கல்டன் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மார்க்ரம் 31 ரன்களில் வெளியேறினார். அவர்கள் இருவரின் விக்கெட்டையும் பும்ரா கைப்பற்றினார்.

பின்னர் சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் பவுமா, முல்டர், டி சோர்ஸி, கைல் வெர்ரைன், யான்சன், கார்பின் போஷ், ஹார்மர், கேஷவ் மகாராஜ் ஆட்டமிழந்தனர். 54.6 ஓவர்களில் 159 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சிராஜ் மற்றும் குல்தீப் 2, அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.

தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் 13, வாஷிங்டன் சுந்தர் 6 ரன்கள் உடன் களத்தில் உள்ளனர். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியை காட்டிலும் இந்திய அணி 122 ரன்கள் பின்தங்கியுள்ளது.

முன்னதாக, முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமாவை உருவ கேலி செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது பும்ரா வீசிய பந்து பவுமாவின் பேடை தாக்கியது. இந்திய வீரர்கள் எல்.பி.ட.பிள்யூ கேட்டு அப்பீல் செய்த‌ நிலையில், கள நடுவர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் டிஆர்எஸ் கேட்பதா? வேண்டாமா? என இந்திய வீரர்கள் ஒன்று கூடி ஆலோசித்தனர்.

அப்போது ரிஷப் பண்ட் அல்லது பும்ரா இருவரில் யாரோ ஒருவர் பவுமாவை ‘பவுனா’ (குள்ளமானவர்)என்று குறிப்பிட்டு பந்து மேலே செல்லும் ஸ்டெம்பை தாக்காது என பேசியது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகி உள்ளது. பின்பு டிஆர்எஸ் எடுக்கவில்லை. ரீப்ளேயை பார்த்தபோது அவர்கள் கூறியபடி பந்து ஸ்டெம்புக்கு மேலே சென்றது தெரியவந்தது. இதில் ‘பவுனா’ என்ற சொல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது ‘பவுனா’ என்றால் குட்டையானவர் அல்லது குள்ளன் என்று பொருள். இவர்களது பேச்சு ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Readmore: குளிர்காலத்தில் இப்படி ஆவி பிடியுங்கள்!. உங்க முகம் ஜொலிக்கும்!. இத்தனை நன்மைகளா?

KOKILA

Next Post

ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக் குழு நிலுவைத் தொகை + பதவி உயர்வு...! அன்புமணி கோரிக்கை...!

Sat Nov 15 , 2025
ஏழாம் ஊதியக் குழு நிலுவைத் தொகை, பதவி உயர்வு உள்ளிட்ட அண்ணாமலை பல்கலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‌ இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏழாம் ஊதியக்குழு பரிந்துரைகளின்படியான நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும், முனைவர் பட்ட ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும், பதவி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை […]
3161612 anbumaniramadoss 1

You May Like