சென்னையை அடுத்த தாம்பரத்தில் விமானப்படை பயிற்சி தளம் உள்ளது.. இங்கிருந்து நேற்று மதியம் 2.30 மணியளவில் புறப்பட்ட பயிற்சி விமானம் திருப்போரூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தது.. அப்போது இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது..
இதையடுத்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து விட்டு விமானத்தை கீழ் நோக்கி இறக்க முயற்சி செய்த போது விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.. இதனால் விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார்.. பயிற்சி விமானம் உப்பளம் பகுதியில் விழுந்து பயக்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது..
அந்த பகுதியில் குடியிருப்போ, கட்டிடமோ இல்லாததால் பெரிய விபத்து ஏற்படவில்லை.. விமானம் விழுந்தது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் விமானப்படை அதிகாரிகள், மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.. மேலும் விமானியை ஹெலிகாப்டரில் மருத்துவமனை கொண்டு சென்றனர்.
இந்த விபத்து விசாரணை மேற்கொள்ள இந்திய விமானப்படை உத்தரவிட்டது.. இதுகுறித்த விசாரணை தொடர்ந்து வருகிறது.. இதனிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்..
இந்த நிலையில் இந்த பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி இன்று மீட்கப்பட்டது.. 2-வது நாளாக இன்று தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் இன்று கருப்புப் பெட்டியை மீட்டனர்.. இந்த கருப்பு பெட்டி, விபத்துக்கான காரணத்தை வெளிப்படுத்த உதவும். விமானத்தில் என்ன தவறு நடந்தது என்பதும் இதன் மூலம் தெரியவரும். விபத்துக்கு முன்னர் விமானிகளின் செயல்பாடுகள், பேச்சுகள் என அனைத்தும், டிஜிட்டல் பதிவாக இந்த கருப்பு பெட்டியில் பதிவாகும். இந்த தரவுகளை மீட்டெடுத்த பின்னர் தான் விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்..
Read More : Flash : சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறைகள்..! முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!



