“அறிவு இருக்குறவன் திருவிழா நடத்துறான்.. நீங்க வெற்று அட்டை தான்..” மீண்டும் விஜய்யை விளாசிய உதயநிதி!

vijay udhayanidhi 1

திமுக இளைஞர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக 75 – அறிவுத்திருவிழா கடந்த 8-ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது.. நேற்றைய நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.. அப்போது அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்..


மேலும் “ இளைஞர்களின் அறிவை வளர்க்க வேண்டும், ஆற்றலை பெருக்க வேண்டும் என்று பல வேலைகளை செய்து வருகிறோம்.. ஆனால் நாட்டில் சில தலைவர்கள், தங்களின் தொண்டர்கள் அறிவாளிகளாக இருப்பதை விரும்புவதில்லை.. தங்கள் தொண்டர்களுக்கு அரசியல் அறிவும், தெளிவும் தங்களால் இனி அரசியலே நடத்த முடியாது என்று சில தலைவர்கள் பயந்து கொண்டு இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு அதிமுக தொண்டர்கள் பெரியார் கொள்கைகள் பற்றி தெரியாது, பேரறிஞர் அண்ணா என்ன சொன்னார் என்று தெரியாது.. இன்னும் சொல்ல போனால் அதிமுக என்ற கட்சி எதற்காக தொடங்கப்பட்டது என்றே தெரியாது.. திமுகவை விமர்சிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தொடங்கப்பட்ட கட்சி தான் அதிமுக.

இனி எந்த காலத்திலும் பாஜக உடன் கூட்டணி என்று கூறிய பழனிசாமி மீண்டும் பாஜக உடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என தொண்டர்கள் கேட்பார்கள்.. ஆனால் தனது தொண்டர்களுக்கு எதுவுமே தெரியக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.. அதிமுக தொண்டர்களுக்கு கொள்கைகள் தெரியவில்லை என்றால் பரவாயில்லை.. எடப்பாடி பழனிசாமிக்கே திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது.. ஏனெனில் அவர் படித்த ஒரே புத்தகம் சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் தான்.. அதை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். அந்த புத்தகம் கிடைக்கவில்லை.. இது தான் இன்று அதிமுகவின் நிலைமை..” என்று அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்..

தொடர்ந்து பேசிய உதயநிதி தவெகவையும் மறைமுகமாக விமர்சித்தார்.. அதிமுக தான் இப்படி உள்ளது என்று இன்னும் சில கும்பல்கள் புதிதாக கிளம்பி உள்ளது.. நம்ம அறிவுத்திருவிழா நடத்தில் 4 நாட்களுக்கு பிறகே அவர்களுக்கு இப்படி ஒரு திருவிழா நடக்கிறது என்பது தெரிந்துள்ளது.. எப்படி அறிவுத்திருவிழா நடத்தலாம், எதற்காக நடத்தினீர்கள் என்று கேட்கிறார்கள்.. அறிவு இருக்கிறவன் திருவிழா நடத்துறான்.. அறிவுத் திருவிழாவில் அவர்களை விமர்சித்து பேசிவிட்டோம் என்று கோபம் வேறு.. எப்படி போலீசை பார்த்தால் திருடனுக்கு பயம் வருமோ, அறிவு என்ற வார்த்தையே கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜி.. சுகாதார மேம்பாட்டை பற்றி பேசும் போது கிருமிகளை பற்றி பேசாமல் இருக்க முடியுமா? அதே போல் தான் அறிவுத்திருவிழாவில் கொள்கைகளை பற்றி பேசும் போது கொள்கையற்றவர்கள் கும்பலின் ஆபத்து பற்றி சிலர் பேசினர்.. நீங்களும் அறிவுத் திருவிழா நடத்துங்கள்.. நடத்திக் காட்டுங்கள் பார்போம்.. அடிமைகளையும், பாசிஸ்ட்களையும், கொள்கையற்ற வெற்று அட்டைகளையும் கண்டு அச்சப்பட தேவையில்லை.. அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை..” என்று தெரிவித்தார்..

Read More : போராட்டம் முடிந்த கையோடு தவெக-வில் இருந்து விலகிய இளைஞர்கள்..!! புஸ்ஸி ஆனந்தின் புகைப்படத்தை கிழித்து எதிர்ப்பு..!!

RUPA

Next Post

ரஷ்யாவுடன் வர்த்தகம் வைத்திருக்கும் நாடுகளுக்கு 500% வரி..!! அதிபர் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை..!! இந்தியாவுக்கு பேராபத்து..!!

Mon Nov 17 , 2025
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா மீது பொருளாதார ரீதியாக மேலும் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் ஒரு கடுமையான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தக உறவுகளை வைத்திருக்கும் நாடுகள் மீது கடுமையான அபராதங்களை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை அவர் ஆதரித்துள்ளார். உக்ரைன் போருக்கு ரஷ்யாவுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதே இந்த கடுமையான நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஆகும். டிரம்ப்பின் நேரடி எச்சரிக்கை : இதுதொடர்பாக […]
Trump 2025

You May Like