கோல்டன் ரத்தம்..! உலகளவில் 50 பேருக்கு மட்டுமே உள்ள மிகவும் அரிதான இந்த ரத்த வகை பற்றி தெரியுமா?

golden blood type 1

Rh-null என்பது மிக அரிதான மற்றும் தனித்துவமான ரத்த வகை. இதை உலகம் முழுக்க ‘Golden Blood’ (தங்க ரத்தம்) என்று அழைப்பார்கள். இந்த ரத்த வகை உலக அளவில் 50 பேருக்கும் குறைவாக மட்டுமே காணப்படுகிறது. பிபிசி வெளியிட்ட தகவலின்படி, இந்த அரிய இரத்த வகையை ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்க விஞ்ஞானிகள் தற்போது முயற்சித்து வருகின்றனர்.


இந்த முயற்சி எண்ணற்ற உயிர்களை காப்பாற்றும் திறன் கொண்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்… Rh-null என்ற மிக அரிதான ரத்த வகை உடையவர்கள் அவசர சூழ்நிலைகளில் ரத்த மாற்று தேவைப்பட்டால், அதே வகை ரத்தம் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.

அதனால், இந்த இடைவெளியை நிவர்த்தி செய்யவும், அதே ரத்தக்குழு உடையவர்களுக்கு உதவவும், மேலும் மருத்துவ ஆராய்ச்சிகளில் பயன்படுத்தவும் விஞ்ஞானிகள் செயற்கை Rh-null இரத்தத்தை உருவாக்கும் வழிகளை தேடி வருகின்றனர்.

கோல்டன் ப்ளட்’ (Golden Blood) என்றால் என்ன?

இந்த மிகவும் வித்யாசமான ரத்த வகை சிவப்பு இரத்த அணுக்களில் Rh என்னும் ஆண்டிஜென்கள் (Rh antigens) முற்றிலும் இல்லாததால் உருவாகிறது. மிகவும் அரிதான ஒரு ஜீன் மாற்றம் (genetic mutation) காரணமாகவே ஒருவர் இந்த இரத்த வகையைப் பெறுகிறார்.

இதைக் முழுமையாகப் புரிந்துகொள்ள, ரத்த வகைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை அறிய வேண்டும். ரத்த வகைகள், அன்டிஜென்கள் (antigens) எனப்படும் புரதங்கள் மற்றும் சர்க்கரைகள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன. இவை சிவப்பு ரத்த அணுக்களின் மேற்பரப்பில் இருந்து, உடலில் உள்ள ரத்தம் பற்றி நோயெதிர்ப்பு அமைப்புக்கு (immune system) சிக்னல் வழங்குகின்றன.

Rh-null இரத்தத்தில் இந்த Rh அன்டிஜென்களே முற்றிலும் இல்லை.. இதுதான் அதனை “Golden Blood” என்ற அளவுக்கு அரிதானதாகவும், மருத்துவர்களுக்கு மிகப் பெறுமதியானதாகவும் ஆக்குகிறது.

கோல்டன் ப்ளட்” என்று பெயர் வைத்துள்ளதால், இது ஏதோ மிகச் சுத்தமானது அல்லது மிகவும் பாதுகாப்பானது என்று பலர் நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல.. என்று டாக்டர் அட்ராக் கூறினார். இந்தப் பெயர், Rh-null ரத்தம் எவ்வளவு அரிது என்பதை சொல்லும் ஒரு பொதுப் பெயர் மட்டுமே; அது மற்ற ரத்த வகைகளைக் காட்டிலும் “சிறந்தது” என்று அர்த்தமில்லை.

ஏன் இது முக்கியமானது?

Rh-null இரத்தத்தில் Rh antigens முற்றிலும் இல்லாததால், இது பெரும்பாலான இரத்த வகைகளுடன் பொருந்தக்கூடியது. அதனால், இந்த இரத்தம் கொண்டவர்கள் மூலதான (universal) தானதாரர்களாக கருதப்படுகிறார்கள்—எந்த இரத்த வகை கொண்டவருக்கும் வழங்க முடியும்.

ஆனால் ஒரு மிகப் பெரிய சிக்கல்: O Negative இரத்தத்தில் A, B மற்றும் Rh-D antigens இல்லாததால் அது universal donor என்று கருதப்படுகிறது. ஆனால் O Negative, Rh-null க்கு கொடுக்க முடியாது. ஏனெனில் O Negative இரத்தத்தில் Rh சிஸ்டத்தில் உள்ள பிற antigen-கள் இன்னும் உள்ளன.

இதனால், Rh-null இரத்தம் கொண்டவர்கள், Rh-null இரத்தம் கொண்டவர்களிடமிருந்து மட்டுமே இரத்தம் பெற முடியும். இந்த மிக அபூர்வ தன்மையின் காரணமாகவே இதை உலகம் “Golden Blood” என அழைக்கிறது.

“உங்கள் இரத்த வகையிலுள்ள antigen-களுக்கு மாறான antigen-களை கொண்ட தானீரத்தத்தை நீங்கள் பெறும் போது, உங்கள் உடல் அதற்கு எதிராக எதிர்ப்புருக்கள் (antibodies) உருவாக்கும்; அந்த இரத்தத்தைத் தாக்கியும் விடும்,” என்று பிரிஸ்டல் பல்கலைக்கழக செல்பயாலஜி பேராசிரியர் டோயே தெரிவித்துள்ளார்.

“அதே இரத்தத்தை மீண்டும் ஒரு முறை பெற வேண்டிய சூழல் வந்தால், அது உயிருக்கு ஆபத்தாக மாறலாம்.” என்றும் அவர் கூறியுள்ளார்..

BBC அறிக்கையின் படி, அந்த மிக அரிதான ரத்தத்தை லேபில் (lab) உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். அவர்கள் stem cell-களை மறுநிரலாக்கி (reprogramming), Rh-null இரத்த அணுக்களை உருவாக்க முயல்கிறார்கள். மேலும், சாதாரண இரத்த அணுக்களில் இருந்து Rh antigen-களை ஜீன் எடிட்டிங் மூலம் நீக்குவது பற்றியும் ஆராயப்படுகிறது.

Rh-null இரத்தத்தைப் பற்றி ஆய்வு செய்வதால் இரத்த வகை மரபியலை (blood group genetics) சிறப்பாகப் புரிந்துகொள்ள, புதிய சிகிச்சைகளை உருவாக்க,
எல்லாமே உதவக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஆஷ் டோயே 2018-ஆம் ஆண்டிலேயே CRISPR-Cas9 எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அரிய ரத்த வகையை லேபில் உருவாக்கினார். ஆனால் இந்த தொழில்நுட்பம் இன்னும் மனிதர்களின் உடலில் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை; அது சர்ச்சைக்குரியதும், கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டதுமாக உள்ளது.

தற்போது, டோயே மற்றும் அவரது குழு RESTORE எனப்படும் மருத்துவ ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இது மனிதர்களுக்குள் செலுத்தப்படும் போது லேபில் உருவாக்கப்பட்ட சிவப்பு ரத்த அணுக்கள் எப்படி செயல்படுகின்றன என்பதைக் கண்டறியும் முதல் முயற்சியாகும். இந்த அணுக்கள் தான தந்தவர்களின் stem cell-களிலிருந்து உருவாக்கப்பட்டவை.

ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் இந்த ‘தங்க இரத்தம்’ எதிர்காலத்தில் அவசரத் தேவைகளுக்கான ரத்த மாற்று சிகிச்சைகளில் நம்பகமான ஆதாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னேற்றம், குறிப்பாக மிக அரிதான ரத்த வகை கொண்ட நோயாளிகளுக்கான இரத்த பற்றாக்குறையை குறைக்க பெரும் உதவியாக இருக்கும்.

Read More : ஆரஞ்சு பழங்கள் உடல் நலத்திற்கு நல்லது தான், ஆனால்.. இவர்கள் தவறுதலாக கூட சாப்பிடக்கூடாது!

RUPA

Next Post

Breaking : வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு.. 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்..’

Mon Nov 17 , 2025
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமால் மற்றும் முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோர் குற்றவாளிகள் என்று வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.. ஹசீனா ஆட்சியை அகற்றிய 2024 ஆம் ஆண்டு மாணவர் போராட்டத்தின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தனர் என்றும் தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் […]
sheik haseena 1

You May Like