சென்னை மேற்கு தாம்பரம், திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் ஜபீத் டைட்டஸ் (25). இவர் மாதவரத்தை சேர்ந்த ரெபேக்கா (27) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ரெபேக்காவின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும், இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு ரெபேக்கா தனது பெற்றோரிடம் பேசிச் சம்மதம் வாங்கி வருவதாக கூறி, மாதவரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் இருந்த ஜபீத், சம்பவத்தன்று போதையில் இருந்துள்ளார். அப்போது தனது மனைவி ரெபேக்காவுக்கு மொபைல் போன் மூலம் அழைத்துப் பேசியுள்ளார்.
அப்போது, “உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன்” என்று ஏக்கத்துடன் மனைவியிடம் கூறிய ஜபீத், சிறிது நேரத்தில் தனது மொபைல் போனை அணைத்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ரெபேக்கா, உடனடியாக தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு தாம்பரத்தில் உள்ள வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது, கணவர் ஜபீத் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜபீத் டைட்டஸின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமான ஒரு மாதத்திலேயே இந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : கல்லூரி மாணவியை நாயுடன் உடலுறவு செய்ய வைத்த கொடூரம்..!! வீடியோவை காட்டி அடுத்து நடந்த பயங்கரம்..!!



