இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான இந்திய அணுசக்தி கழகம் (NPCIL), 2025 ஆம் ஆண்டிற்கான புதிய பணியாளர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியிட விவரம்:
டெபியூட்டி மேனேஜர் (HR) – 31
டெபியூட்டி மேனேஜர் (F&A) – 48
டெபியூட்டி மேனேஜர் (C&MM) – 34
டெபியூட்டி மேனேஜர் (Legal) – 1
ஜூனியர் இந்தி மொழிப்பெயர்பாளர் – 8
வயது வரம்பு: டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். மொழிப்பெயர்பாளர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 30 வயது வரை இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் 2 ஆண்டு எம்பிஏ முடித்திருக்க வேண்டும்/ 2 வருட முதுகலை பிஜி டிப்ளமோ/ மேலாண்மை முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
பிரிவு வாரியான கூடுதல் தகுதிகள்:
1. மனிதவள மேம்பாடு (HR): Human Resource / HRM / Personnel Management / Labour Studies போன்ற மனிதவள சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் MBA/PG Degree.
2. நிதி பிரிவு (Finance): MBA (Finance) அல்லது CA / CMA / CFA பெற்றிருக்கலாம்.
3. C&MM பிரிவு (Contracts & Materials Management): எந்த ஒரு பொறியியல் துறையிலும் BE/B.Tech பட்டம்.
4. சட்ட பிரிவு (Legal)
- LLB தேர்ச்சி
- Bar Council பதிவு அவசியம்
- குறைந்தது 3 ஆண்டு அனுபவம் தேவை.
ஜூனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர்: இந்தி மொழிப்பெயர்பாளர் பதவிக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி கொண்டு முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
* தேர்வாகும் நபர்களுக்கு நிலை 10 கீழ் ரூ.56,1000 மற்றும் ரூ.30,855 கொடுப்பனையுடன் மொத்தம் ரூ.89,955 மாதம் வழங்கப்படும்.
* இந்தி மொழிப்பெயர்பாளர் பதவிக்கு நிலை 6 கீழ் ரூ.35,400 உடன் ரூ.19,470 கொடுப்பனை சேர்ந்து ரூ.54,870 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் அணுசக்தி நிறுவனமான NPCIL–இல் அறிவிக்கப்பட்ட டெபியூட்டி மேனேஜர் மற்றும் இந்தி மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு 2 கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படுகிறது.
முதல் கட்டம்: ஆன்லைன் எழுத்துத் தேர்வு
மொத்த தேர்வு நேரம்: 120 நிமிடங்கள்
கேள்விகள்: 120 கேள்விகள்
பிரிவுகள்: 2 பிரிவு
மதிப்பெண்களில் சிறந்து விளங்குவோர் மட்டுமே அடுத்த கட்டமான நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
இரண்டாம் கட்டம்: தனிப்பட்ட நேர்முகத் தேர்வு
நேர்காணல் மதிப்பெண்கள்: 100 மதிப்பெண்கள்
நேர்காணலுக்கான தேதி, இடம் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தேர்வானவர்களுக்கு இமெயில் மற்றும் SMS மூலம் தகவல் அனுப்பப்படும்.
இறுதி தேர்வு பட்டியல்: இரண்டு கட்டத் தேர்விலும் பெறும் மதிப்பெண்கள் இணைந்தே இறுதி தரவரிசை நிர்ணயிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.npcilcareers.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 27-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.



