அதிகம் தேடப்பட்டு வந்த முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. 26 தாக்குதல்களுக்கு காரணமானவர்..!

madvi hidma 1763445723116 1763445727869 2

பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக சுமார் 26 ஆயுதமேந்திய தாக்குதல்களுக்கு பொறுப்பான மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹித்மா, இன்று போலீசார் உடனான என்கவுண்டருக்கு பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் அதிகம் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் ஆவார்.. ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உயர்மட்ட மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


1981 ஆம் ஆண்டு சுக்மாவில் பிறந்த ஹித்மா, 1996 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை கெரில்லா இராணுவத்தின் ஒரு பட்டாலியனுக்கு தலைமை தாங்கினார். அதன் பிறகு, சிபிஐ மாவோயிஸ்ட்டின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான மத்திய குழுவின் இளைய உறுப்பினரானார் ஹித்மா.

சத்தீஸ்கரில் ஏப்ரல் 2021 இல் 22 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்ட தாக்குதலில் மாவோயிஸ்ட் தலைவரும் முக்கிய சந்தேக நபராக இருந்தார். ஹித்மா குறித்த தகவல் தருவோருக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.. அவரது மனைவியும் என்கவுன்டரில் கொல்லப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..

இதனிடையே, மற்றொரு மோதலில், சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டார். காலை வேளையில் ஒரு காட்டு மலையில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது துப்பாக்கிச் சண்டை தொடங்கியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (பஸ்தார் ரேஞ்ச்) சுந்தர்ராஜ் P பேசிய போது .“இதுவரை, ஒரு மாவோயிஸ்ட்டின் உடல் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது, மேலும் அந்தப் பகுதி முழுமையாக சுத்திகரிக்கப்பட்டவுடன் கூடுதல் விவரங்கள் பகிரப்படும்” என்று தெரிவித்தார்..

Read More : தற்கொலைப் படை தாக்குதல் என்பது தியாகப் பணி; டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் பேசிய பகீர் வீடியோ..!

RUPA

Next Post

இந்த தடவை மிஸ்ஸே ஆகக் கூடாது..!செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த டார்கெட்!

Tue Nov 18 , 2025
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. அந்த வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் உடன்பிறப்பே வா என்ற பெயரில் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.. அதன்படி இதுவரை 100க்கும் மேற்பட்ட தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.. இந்த நிலையில் இன்று கிணத்துக்கடவு, வால்பாறை […]
Minister Senthil Balaji Tamilnadu CM MK Stalin 1

You May Like