பிரபல நட்சத்திர ஜோடி சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதரி தங்கள் ஆஃப் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரிக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகின்றனர். இவர்களின் வைரலான புகைப்படங்களைப் பார்க்கும்போதே இவர்களது காதல் என்றும் உயிர்ப்புடன் உள்ளது என்பது தெரியவரும்.
திருமணம்: எளிய மற்றும் நேர்த்தியான பந்தம்
கடந்த 2024 ஆம் ஆண்டில் அதிதி ராவ் ஹைதரி மற்றும் சித்தார்த் மிகவும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, கடந்த செப்டம்பர் 16 அன்று, இந்தத் தம்பதியினர் தங்களது அழகான மற்றும் ரொமாண்டிக்கான திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
சித்தார்த்தின் முதல் மனைவி யார்?
அதிதி ராவ் ஹைதரி, சித்தார்த்தின் இரண்டாவது மனைவி ஆவார். சித்தார்த்தின் முதல் திருமணம் சுமார் 4 ஆண்டுகள் நீடித்தது. 2003 ஆம் ஆண்டில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ (Boys) என்ற திரைப்படத்தின் மூலம் சித்தார்த் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதே ஆண்டில்தான், அவர் தனது காதலியான மேக்னா நாராயண் (Meghna Narayan) என்பவரை மணந்தார். டெல்லியில் வசித்தபோது மேக்னா சித்தார்த்துக்கு அண்டை வீட்டாராக (neighbour) இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இவர்களது திருமண வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. ‘ரங் தே பசந்தி’ (Rang De Basanti) திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை சோஹா அலி கானுடன் சித்தார்த்துக்கு ஏற்பட்ட நெருக்கம் இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. 4 ஆண்டுகள் கழித்து, 2007 ஆம் ஆண்டில் இந்தத் தம்பதியினர் பிரிந்து செல்ல முடிவெடுத்தனர். பிரிவுக்குப் பிறகு, மேக்னா நாராயண் பொது வாழ்க்கையிலிருந்து விலகி அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்..
முதல் மனைவியைப் பிரிந்த பிறகு பல ஆண்டுகள் சிங்கிளாகவே இருந்தார் சித்தார்த். பின்னர் 2021-ம் ஆண்டு, சித்தார்த் ‘மஹா சமுத்திரம்’ (Maha Samudram) திரைப்படத்தின் படப்பிடிப்பில் அதிதி ராவ் ஹைதரியைச் சந்தித்தார். இவர்களது பிணைப்பு வலுப்பெற்றது. இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
Read More : வாரணாசி பட விழாவில் சர்ச்சை கருத்து.. இயக்குனர் ராஜமௌலி மீது காவல் நிலையத்தில் புகார்..!



