ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்!. ஓமனை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய ஏ அணி!.

india semifinal

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தி இந்திய ஏ அணி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. முந்தைய போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியிடம் தோல்வியடைந்ததால், போட்டியில் முன்னேற ஓமன் ஏ அணியை வீழ்த்த வேண்டியிருந்தது.


தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏசிசி ஆண்கள் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 போட்டியில் இந்தியா ஏ- ஓமன் அணிகள் மோதின. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஓமன் அணி, 7 விக்கெட்டுக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது, ஓமன் அணிக்காக வாசிம் அலி ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்தார், ஹம்மத் மிர்சாவும் 32 ரன்கள் எடுத்தார். அவர்களைத் தவிர, வேறு எந்த ஓமன் பேட்ஸ்மேனும் குறிப்பிடத்தக்க இன்னிங்ஸை எடுக்க முடியவில்லை. கடைசி 45 பந்துகளில் ஓமானை வெறும் 42 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய இந்திய பந்து வீச்சாளர்கள், ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய தொடக்க வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி (12) மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (10) ஆகியோர் சொற்ப ரன்களின் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால் நமன் திர் 19 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் விறுவிறுப்பான 30 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை நிலைநிறுத்தினார், இதனை தொடர்ந்து களமிறங்கிய ஹர்ஷ் துபே நிதானமாக விளையாடி அரைசதம் கடந்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம், இந்தியா ‘ஏ’ அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணிக்குப் பிறகு அரையிறுதிக்குள் நுழைந்த இரண்டாவது அணியாக இந்திய ஏ அணி உள்ளது.

Readmore: பாதாளத்தில் பதிந்த குபேர பைரவர்.. ராகு காலங்களில் மட்டுமே பூஜை..! மதுரையில் இப்படி ஒரு கோவிலா..?

KOKILA

Next Post

கார்த்திகை அமாவாசை!. மகாலட்சுமியின் திருஅவதாரம்!. அனைத்து கஷ்டங்களும் தீர இதை மட்டும் செய்ய மறந்துடாதீங்க!.

Wed Nov 19 , 2025
அமாவாசை நாள் என்பது மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள், தான தர்மங்கள், மந்திர பாராயணம் ஆகியவை பல மடங்கு அதிக பலனை கொடுக்கக் கூடியதாக நம்பப்படுகிறது. இந்த நாளில் நாம் செய்தும் வழிபாடுகளையும், தானங்களையும் நம்முடைய முன்னோர்கள் சூட்சம வடிவில் வந்து ஏற்று, நம்மை வாழ்த்துவதாக ஐதீகம். மாதந்தோறும் அமாவாசை திதி வந்தாலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. […]
aani amavasai 11zon

You May Like