இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள திட்ட விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 134 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
பணியிட விவரம்:
திட்ட விஞ்ஞானி E – 1
திட்ட விஞ்ஞானி III – 13
திட்ட விஞ்ஞானி II – 29
திட்ட விஞ்ஞானி I – 64
விஞ்ஞானி உதவியாளர் – 25
நிர்வாக உதவியாளர் – 1
வயது வரம்பு:
- திட்ட விஞ்ஞானி E பதவிக்கு அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.
- திட்ட விஞ்ஞானி III பதவிக்கு 45 வயது வரை இருக்கலாம்.
- திட்ட விஞ்ஞானி II பதவிக்கு அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம்.
- திட்ட விஞ்ஞானி I பதவிக்கு 35 வயது வரை இருக்கலாம்.
- விஞ்ஞானி உதவியாளர் மற்றும் நிர்வாக உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி:
திட்ட விஞ்ஞானி – E
- இயற்பியல், கணிதம், வானிலையியல், வளிமண்டல அறிவியல்,
- மின்னணுவியல், கருவியியல்,
- மின்னணுவியல் & தொடர்பியல்
- இவற்றில் ஏதேனும் ஒன்றில் M.Sc அல்லது B.E/B.Tech தகுதியுடன் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- அதேசமயம் 11 ஆண்டுகள் தொழில்பணி அனுபவமும் அவசியம்.
திட்ட விஞ்ஞானி – பிரிவு (III / II)
- வானிலையியல், வேளாண் புள்ளியியல், வேளாண் இயற்பியல்,
- தொலைஉணர்வு & GIS, கணினி அறிவியல்,
- இயற்பியல், கணிதம், வளிமண்டல அறிவியல்,
- மின்னணுவியல், கருவியியல், மின்னணுவியல் & தொடர்பியல்
- இவற்றில் M.Sc அல்லது B.E/B.Tech முடித்திருக்க வேண்டும்.
அனுபவத் தேவைகள்:
- திட்ட விஞ்ஞானி III : 7 ஆண்டுகள் அனுபவம்
- திட்ட விஞ்ஞானி II : 3 ஆண்டுகள் அனுபவம்
விஞ்ஞானி உதவியாளர்: இயற்பியலில் B.Sc அல்லது கணினி அறிவியல், கணினி பயன்பாடு, எலக்ட்ரிக்கல், கம்யூனிகேஷன் ஆகிய துறைகளில் B.E பட்டப்படிப்பு.
நிர்வாக உதவியாளர்: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டப்படிப்பு, கூடுதலாக கணினி திறன் அவசியம்.
சம்பளம்:
- திட்ட விஞ்ஞானி E பதவிக்கு ரூ.1,23,100 வழங்கப்படும்.
- திட்ட விஞ்ஞானி III பதவிக்கு ரூ.78,000 வழங்கப்படும்.
- திட்ட விஞ்ஞானி II பதவிக்கு ரூ.67,000 வழங்கப்படும்.
- திட்ட விஞ்ஞானி I பதவிக்கு ரூ.56,000 வழங்கப்படும்.
- விஞ்ஞானி உதவியாளர் பதவிக்கு ரூ.29,200 வழங்கப்படும்.
- நிர்வாக உதவியாளர் பதவிக்கு ரூ.29,200 சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். பிறந்த தேதி, அனுபவம், கல்வித்தகுதி, இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் அழைப்பு விடுக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க ஆர்வமுள்ள பட்டதாரிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் https://mausam.imd.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி: டிசம்பர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Read more: நிதிஷ் குமார் மீண்டும் பீகார் முதல்வராக பதவியேற்பாரா? ணை முதல்வர் யார் என்பது சஸ்பென்ஸ்!



