2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் நேற்று ஒரு சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது..
இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. அதன்படி இன்று காலை ரூ.100 உயர்ந்த நிலையில் தற்போது மாலையில் ரூ. 100 உயர்ந்து ரூ.11,600க்கு விற்பனையாகிறது. இதனால் இன்று காலை ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்த நிலையில் தற்போது மாலையும் ரூ.800 உயர்ந்து ரூ. 92,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1600 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ.173க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,73,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..
Read More : 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி.. கோவையில் பிஎம் கிசான் 21-வது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி..!



