பரோடா வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்..! உடனே விண்ணப்பிங்க..

Bank Jobs Recruitment.jpg 1

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் பெறத்தக்கவைகள் மேலாண்மைத் துறையில் உள்ள 82 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியிட விவரம்:

  • பகுதி மேனேஜர் – 13
  • மண்டல மேனேஜர் – 13
  • ஏரியா மேனேஜர் – 49
  • புகார் மேனேஜர் – 2
  • ப்ராசஸ் மேனேஜர் – 1
  • வெண்டார் மேனேஜர் – 1
  • பிளோர் மேனேஜர் – 3

வயது வரம்பு:

  • பகுதி மேனேஜர்: 35–52 வயது
  • மண்டல மேனேஜர்: 30–45 வயது
  • ஏரியா மேனேஜர்: 26–38 வயது
  • புகார் மேனேஜர்: 30–45 வயது
  • ப்ராசஸ் மேனேஜர்: 25–38 வயது
  • வெண்டார் மேனேஜர்: 25–38 வயது
  • பிளோர் மேனேஜர்: 25–38 வயது

தகுதிகள்:

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு கட்டாயம்.
  • முதுகலை டிப்ளமோ / MBA முடித்தவர்களுக்கு முன்னுரிமை.
  • 5 முதல் 15 ஆண்டுகள் வரை பணியள அனுபவம் தேவை.

கீழ்க்கண்ட துறைகளில் அனுபவம் இருக்க வேண்டும்:

  • வங்கி
  • வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC)
  • நிதி சேவைகள்
  • நிதி நிறுவனம்
  • காப்பீட்டுத் துறை
  • நிதி இடைத்தரகர்
  • தொலைத்தொடர்பு துறை
  • பிற நிதி சார்ந்த துறைகள்
  • இதில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வாடிக்கையாளர் சேவை உதவி மையத்தில் (Customer Support/Help Desk) பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்: தேர்வாகும் நபர்களின் கல்வித்தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யபப்டுவார்கள். விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பதார்கள் https://bankofbaroda.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Read more: Flash : ஹேப்பி நியூஸ்.. தொடர் உயர்வுக்கு பின் மீண்டும் சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ..!

English Summary

Public sector bank Bank of Baroda has announced 82 vacancies.

Next Post

ரஷ்யா - உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா? சத்தமே இல்லாமல் ட்ரம்ப் செய்து வரும் சம்பவம்!

Thu Nov 20 , 2025
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிக்க ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கு சத்தமே இல்லாமல் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையேயான போராட்டத்தை நிறுத்தும் ஒரு முன்னேற்றமாக அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரம் ரஷ்யா-உக்ரைன் அமைதிக்கான 28 புள்ளிகளைக் கொண்ட திட்டத்தை ஒப்புக்கொண்டார் என்று உயர் தர நிர்வாக அதிகாரிகள் தெரிவித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. […]
trump putin

You May Like