2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.800 குறைந்தது..
இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ரூ.40 குறைந்து ரூ.11,460க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. ரூ.91,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை 2-வது நாளாக இன்று மீண்டும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..
அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.4 குறைந்து ரூ.169க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,69,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..
Read More : “2026-ல் தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை..!” எடப்பாடி தலையில் இடியை இறக்கிய பிரேமலதா.. பரபர அரசியல் களம்..!



