திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற இளைஞர், கோவை சூலூரில் தங்கி, அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இதற்கிடையே, நேற்றிரவு ஹேமச்சந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பரோட்டா சாப்பிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தனது அறைக்குச் சென்ற மாணவம், இன்று காலை அசைவின்றி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஹேமச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சூலூர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாணவருக்கு பரோட்டா சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் என்ற பிரச்சனை இருந்ததாகவும், அதிக காய்ச்சலில் இருந்தபோது பரோட்டா கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.