மியான்மர் மோசடி கும்பலிடம் சிக்கிய 370 இந்தியர்கள் மீட்பு!. தனி விமானங்கள் மூலம் தாயகம் திரும்பினர்!.

370 Indians rescued from Myanmar

மியான்மரில் வேலை நிமித்தமாக சென்று மோசடி கும்பலிடம் சிக்கிய 370 இந்தியர்கள் மீட்கப்பட்டு தனி விமானம் மூலம் நாடு திரும்பினர்.


மியான்மரில் உள்ள மியாவாடி நகரில், அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு காத்திருப்பதாக, ‘வாட்ஸாப், டெலிகிராம்’ போன்ற தகவல் பரிமாற்ற செயலிகள் வாயிலாக தகவல் பரவின. இதை நம்பி, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் அப்பணிக்கு சென்றனர். அங்கு அவர்களை ஏமாற்றி பாஸ்போர்ட், பணம், ‘மொபைல் போன்’ உள்ளிட்ட அனைத்தையும் மோசடி கும்பல் பறித்துக் கொண்டது. மியான்மர் – தாய்லாந்து எல்லையில் உள்ள மயாவாடி என்ற இடத்தில் உள்ள கே.கே.பார்க் என்ற இடத்தில், போலி கால் சென்டரில் அவர்களுக்கு பணி வழங்கப்பட்டது.

அங்கிருந்தபடி, ‘ஆன்லைன்’ வாயிலாக பணம் பறிக்கும் மோசடி வேலையில் இந்தியர்களை ஈடுபட வைத்தனர். அங்கிருந்து தப்ப முடியாமல் தவித்து வந்தவர்களை அந்நாட்டுப் போலீசார் சமீபத்தில் மீட்டனர். இதைத்தொடர்ந்து, நம் துாதரக அதிகாரிகளின் உதவியுடன் மூன்று தனி விமானங்களில் அவர்கள் டில்லிக்கு நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்டனர். இதில், 55 பேர் ஆந்திராவின் விஜயவாடா, விசாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் டில்லியில் உள்ள ஆந்திர பவனுக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, வடக்கு ரயில்வே நிர்வாகத்தின் உதவியுடன் ரயில் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆந்திர அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Readmore: ஷாக்!. ஓடும் ரயிலில் மின்சார கெட்டிலை பயன்படுத்தி மேகி சமைத்த பெண்!. தீவிபத்து ஏற்படும் அபாயம்!. வைரல் வீடியோ!. ரயில்வே அதிரடி நடவடிக்கை!

KOKILA

Next Post

லிப் டூ லிப் முத்தம்!. 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய பழக்கம்!. ஆய்வில் சுவாரஸிய தகவல்!

Sat Nov 22 , 2025
உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் பழக்கம் தோன்றி சுமார் 2 கோடி ஆண்டுகள் ஆவதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். முத்தம் எவ்வாறு உருவானது என்பதை ஆராயும் ஒரு புதிய ஆய்வு , குரங்கு மூதாதையர்களும், நியாண்டர்தால் போன்ற ஆரம்பகால மனிதர்களும் தங்கள் நண்பர்கள் மற்றும் துணைகளுடன் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. இந்த நடத்தை 21 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். மனிதகுலத்தின் ஆரம்பகால முத்தங்கள் 4,500 […]
Lip to lip kiss

You May Like