ஆபரணங்கள் அணிவது நம் கலாச்சாரத்தோடு கலந்த ஒன்றாகும். குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் கைகளில் மோதிரம் அணிவதை பெரும்பாலும் விரும்புவார்கள். தங்கம் வெள்ளி மற்றும் செம்பு போன்ற உலோகங்களாலான மோதிரங்களை கைகளின் இரண்டாவது விரல்களில் பெரும்பாலானவர்கள் அணிந்திருப்பார்கள். இந்த விரல் தான் மோதிர விரல் என்று அழைக்கப்படுகிறது.
மோதிரங்கள் பெரும்பாலும் இடது கை விரல்களில் தான் அணியப்படும். ஏனெனில் இடது கை விரல்கள் இதயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
எனினும் சிலர் கைகளில் அனைத்து விரல்களிலும் மோதிரங்களை அணிந்து இருப்பார்கள். ஒவ்வொரு விரலில் மோதிரம் அணிவதற்கும் ஒரு பலன் இருப்பதாக நம்பப்படுகிறது. கைகளின் கட்டை விரலில் மோதிரம் அணிவதால் ஆற்றலும் ஆரோக்கியமும் அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிவது ஆளுமை திறனை அதிகரிக்கும். மேலும் இது தன்னம்பிக்கையையும் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிலருக்கு நடுவிரலில் மோதிரம் அணியும் பழக்கமும் உண்டு.
இதுபோன்று நடு விரலில் மோதிரம் அணிவதால் காதல் மற்றும் வசீகரம் அதிகரிக்கும். மேலும் திருமண வாழ்க்கையும் சந்தோசமாக அமையும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. மோதிர விரலில் மோதிரம் அணிவது செல்வ வளத்தை அதிகரிக்கும். மேலும் மோதிர விரலில் தங்க மோதிரத்தை மட்டுமே அணிய வேண்டும். கைகளில் சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது அப்படி அணிவது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதோடு பல துர்பாக்கியங்களையும் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. எனினும் கட்டைவிரலில் மோதிரம் அணிய விரும்பினால் செம்பு உலோகத்தால் ஆன மோதிரத்தை அணியும் படி வலியுறுத்துகிறார்கள் முன்னோர்கள்.