கறிக்கோழி விலை சர்ருனு குறைஞ்சிடுச்சு..! ஆனால் முட்டை விலை..? – முழு விவரம் இதோ..

egg chicken 2025 07 2ec21ea989480ea20dace778a5f36b90 1

சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் அசைவ உணவுகளுக்காகவே நாட்டுக்கோழிகளை வீட்டில் வளர்த்தவர்களும் உண்டு. பிராய்லர் கோழிகள் என்பதெல்லாம் அப்போது கிடையாது. கிராமத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் ஆங்காங்கே சிதறி கிடக்கும் சிறுதானியங்களை தின்றுவிட்டு உற்சாகமாக அங்குமிங்கும் திரியும் நாட்டுக்கோழிகளின் இறைச்சிக்கு சுவை அதிகம். இப்போது, விலையை கருத்தில் கொண்டு பெரும்பாலானோர் பிராய்லர் கோழி இறைச்சியை வாங்குகிறார்கள்.


பொதுவாக விடுமுறை காலங்களில் இறைச்சி விற்பனை அதிகரிப்பது வழக்கம். ஆட்டிறைச்சியின் விலை அதிகமாக உள்ளதால் கோழி இறைச்சியின் பயன்பாடே தற்போது மிகவும் அதிகமாக உள்ளது. சமைப்பது எளிது, சுவை போன்ற காரணங்களால் கோழி இறைச்சி வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கோழிக்கறியின் விலை கிடுகிடுவென உயர்ந்ததால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் சிக்கன் விற்பனை குறைந்துள்ளது. வார விடுமுறை நாளான இன்று சிக்கன் விலை குறைந்துள்ளது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி விலை கிலோவுக்கு நான்கு ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ 94 ரூபாய்க்கும், முட்டை கோழி 122 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை குறைந்ததால் தமிழக முழுவதும் சிக்கன் விலை குறைந்துள்ளது. அதே நேரம் முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி 6.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read more: வங்கக்கடலில் உருவாகிறது சென்யார் புயல்.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்..?

English Summary

Chicken prices have decreased significantly..! But egg prices..? – Here are the full details..

Next Post

SIP-இல் மாதம் ரூ.5,000 முதலீடு..!! ரூ.1 கோடி இலக்கை எளிதாக அடைவது எப்படி..? புதிய முதலீட்டாளர்களுக்கு எந்த ஃபண்ட் சிறந்தது..?

Sun Nov 23 , 2025
மனித வாழ்வில் ஒரு பாதுகாப்பான பொருளாதாரம் மிக முக்கியமான அம்சமாக உள்ளது. எதிர்பாராத பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கும், எதிர்காலத்தை வலிமையாக கட்டமைப்பதற்கும் சேமிப்பும் முதலீடும் அத்தியாவசியமாகின்றன. இந்த வரிசையில், தற்போது சிறந்த பலன்களை வழங்கக்கூடிய முதலீட்டு திட்டமாக முறையான முதலீட்டு திட்டம் (SIP – Systematic Investment Plan) விளங்கி வருகிறது. பெரும்பாலான மக்கள் எஸ்.ஐ.பி.யில் அதிகப் பணம் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், மாதம் ரூ.5,000 என்ற […]
Mutual Fund SIP 2025

You May Like