கடந்த சில ஆண்டுகளில், புற்றுநோய் தாக்கம் அச்சுறுத்தும் விதத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக இளம் தலைமுறையையே அதிகமாக தாக்கி வருகிறது என்பது மருத்துவ துறையின் பெரும் கவலையாக உருவாகியுள்ளது. முன்பு வயதானவர்களுக்கே ஏற்படும் என்று கருதப்பட்ட புற்றுநோய், இன்று 20 முதல் 30 வயது வரையிலான இளைஞர்களுக்கே அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒருகாலத்தில் மூப்பின் நோயாக பார்க்கப்பட்ட இந்த நோய், இப்போது நம் வீட்டு கதவைத் தட்டும் அளவுக்கு அருகில் வந்து விட்டது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த திடீர் அதிகரிப்புக்குப் பின்னால் நவீன வாழ்க்கைமுறை, உணவு பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், மற்றும் சூழலியல் காரணிகள் முக்கிய பங்காற்றுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.
டாக்டர் பால்சாராவின் கூற்றுப்படி, இன்றைய இளைஞர்கள் பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், சர்க்கரை பானங்கள், உடனடி நூடுல்ஸ், ரெடி-மெய்ட் உணவுகள் மற்றும் துரித உணவுகளின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்த உணவுகள் ஆரோக்கியத்திற்கு மிக ஆபத்தானவை. அவற்றில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள், அதிக உப்பு மற்றும் உடலுக்கு கடினமான ரசாயன சேர்க்கைகள் நிறைந்துள்ளன,” என்று டாக்டர் பால்சாரா தெரிவித்தார்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Ultra-Processed Foods – UPF) அதிகமாக நுகரப்படும் நாடுகளில் புற்றுநோய் விகிதம் வேகமாக உயர்ந்துவருவதை பல ஆய்வுகள் வெளிக்கொணர்கின்றன. நிபுணர்கள் குறிப்பாக இளம் வயதினருக்கே மிகுந்த அபாயம் உருவாகியுள்ளது என்று எச்சரிக்கின்றனர். குறிப்பாக பெருங்குடல், கணையம் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்கள் இளையவர்களிடையே அதிகரித்து வருகின்றன.
இந்த நோய்களில் பெரும்பாலானவை உணவுப் பழக்கங்கள், வளர்சிதை மாற்றம் மற்றும் உடல் செயல்பாடுகளின் குறைபாடுகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 40 வயதிற்குட்பட்டவர்களிடையே சமீபத்தில் தைராய்டு புற்றுநோய், மார்பக புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான இளைஞர்கள் சோர்வு, செரிமான பிரச்சினைகள் மற்றும் விவரிக்க முடியாத எடை அதிகரிப்பு போன்ற ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை பெரும்பாலும் நிராகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் எவ்வாறு புற்றுநோயைத் தூண்டுகின்றன?
உடல் பருமன் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை: பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகளவில் எடை அதிகரிக்கச் செய்கின்றன. அதனால் ஏற்படும் உடல் பருமன் (Obesity) குறைந்தது 13 வகையான புற்றுநோய்களுக்கு முக்கிய ஆபத்து காரணியாகும். அதிக கொழுப்பு உடலில் எஸ்ட்ரோஜன் மற்றும் இன்சுலின் போன்ற ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைக்கிறது. இந்த ஹார்மோன் மாற்றங்கள் புற்றுநோய் செல்கள் வளர உகந்த சூழலை உருவாக்குகின்றன.
நாள்பட்ட வீக்கம்: பதப்படுத்தப்பட்ட உணவுகள் தொடர்ந்து உடலில் குறைந்த தரத்திலான ஒளிவீக்கத்தை (Chronic inflammation) ஏற்படுத்துகின்றன. இது செல்களில் மாற்றத்தை தூண்டுகிறது, கட்டிகள் உருவாகுவதற்கும் உருவான புற்றுநோய் செல்கள் வேகமாக வளர்வதற்கும் வழிவகுக்கிறது.
குடல் நுண்ணுயிரியல் சீர்குலைவு: மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் குடல் நன்மை பாக்டீரியாக்களை குறைக்கின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனப்படும், செரிமானப் பாதை பாதுகாப்பு குறையும், புற்றுநோய் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.மொத்தத்தில்பதப்படுத்தப்பட்ட உணவுகள் உணவுகள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை மட்டுமில்லாமல், புற்றுநோய் விதைகளை விதைக்கின்றன.
நீரிழிவு நோயை ஏற்படுத்தும்: இளைஞர்களிடையே நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது மருத்துவர்களை கடுமையாக கவலைக்குள்ளாக்கியுள்ளது. புற்றுநோயைத் தொடர்ந்து, இது கூட ஒரு புதிய தொற்றுநோய் போன்ற சூழ்நிலை உருவாக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.
Read more: உங்க வீட்டு பாத்ரூம் கதவு தண்ணீர் பட்டு சேதமடைகிறதா..?அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!



