வைகை புயல் என்று தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் வடிவேலு காமெடி உலகத்தில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். விஜய்காந்த் உடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, திமுக மேடைகளில் விஜயகாந்திற்கு எதிராக பேசினார். இதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு வாய்ப்புகள் குறைந்த சூழலில் ஒருகட்டத்தில் வடிவேலுவை திரையிலேயே காண முடியவில்லை.
அவர் மீது சக நடிகர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்களும் நீண்டுகொண்டே சென்றது. தங்களை அவர் வளரவே விடமாட்டார்; அடிமை போல் நடத்துவார் என்று அவருடன் நடித்த சக காமெடி நடிகர்கள் தொடர்ந்து குற்றசாட்டை முன்வைத்தனர். நீண்ட காலத்திற்கு பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அதன் பின்னர் வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் மெகா ஹிட்டானது.
அதன்பிறகு மாரீசன், கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தச் சூழலில் வடிவேலு பற்றி பிரபல காமெடி நடிகர் கொட்டாச்சி கூறியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அவர் கூறுகையில், “தயாரிப்பாளர் எப்போதுமே எங்களை போன்ற நடிகர்களுக்கு மொத்தமாகத்தான் சம்பளத்தை கொடுப்பார்.
அதனை வடிவேலு, நானே அவர்களிடம் கொடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லி மொத்த பணத்தையும் வாங்கிக்கொள்வார். தயாரிப்பாளர் எவ்வளவு பணம் கொடுக்கிறாரோ அதை வாங்கிக்கொண்டு எங்களுக்கு பாதி சம்பளம்தான் கொடுப்பார். ஆனால் விவேக் அப்படி இல்லை. தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு டெய்லி சம்பளம் எவ்வளவோ அதனை அப்படியே கொடுக்க சொல்லிவிடுவார்” என்றார்.
Read more: இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் பதவியேற்றார்: அவர் கடந்து வந்த பாதை இதோ..!



