fbpx

பத்ம விருதை திருப்பி தர முடியுமா..? ரத்து செய்ய யாருக்கு அதிகாரம்..? தீயாய் பரவும் கேள்விக்கு பதில் இங்கே..!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் செய்தியாளர்களை சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், “பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை என்னால் ஏற்க முடியாது. எனவே, நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளதாக பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். பஜ்ரங் புன்யாவை தொடர்ந்து, மல்யுத்த வீரர் விரேந்தர் சிங்கும் தடகள வீராங்கனை சாக்ஷி மாலிக்கிற்கு ஆதரவு அளிக்கும் வகையில், பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

ஆனால், இப்படி பத்ம விருதை ஒப்படைக்க முடியுமா? என்று சோஷியல் மீடியாக்களில் கேள்விகள் பல எழுந்திருக்கின்றன. பத்ம விருதுகளைப் பொறுத்த அளவில், பத்ம விருதுகளை ஒப்படைக்க நமது நாட்டில் எந்த விதிகளும் கிடையாது. ஒருவேளை வீரர்கள் இந்த விருதைத் திருப்பி அளித்தாலும், விருது பெற்றவர்கள் பட்டியலில் இவர்கள் பெயர் இடம்பெற்றிருக்கும். பத்ம விருதுகளை ரத்து செய்யக் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

செந்தில் பாலாஜியை போல இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறாரா பொன்முடி..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Sat Dec 23 , 2023
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொன்முடி, செந்தில் பாலாஜியைப் போலவே இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 21ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை […]

You May Like