அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஷாங்காய் விமான நிலையத்தில் தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இடைநிறுத்தம் நேரத்தில், சீன அதிகாரிகள் அவரது இந்தியப் பாஸ்போர்ட்டை ஏற்க மறுத்ததோடு, அருணாசலப் பிரதேசம் சீனாவின் பகுதி என கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த பெண் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் சீன அதிகாரிகள் தனது இந்திய விசா “தவறானது” (invalid) என்று கூறியதால் தான் குழப்பமடைந்ததாக கூறினார்.
அந்தப் பெண் பெம் வாங் தொங்க்டொக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது யுனைடெட் கிங்டம் (UK)-ல் வசித்து வருகிறார். அவர் நவம்பர் 21-ஆம் தேதி லண்டனில் இருந்து ஜப்பான் பயணித்துக் கொண்டிருந்தார். ஷாங்காயில் மூன்று மணி நேர இடைநிறுத்தத்திற்காக இறங்கிய அவர், சீன அதிகாரிகளால் 18 மணி நேரத்திற்கு மேல் தடுத்து வைக்கப்பட்டார்.
தனது எக்ஸ் பதிவில் பதிவிட்ட அந்த பெண் ” 2025 நவம்பர் 21-ஆம் தேதி, ஷாங்காய் விமான நிலையத்தில் சீன குடிவரவுத்துறை மற்றும் சீன அதிகாரிகள் 18 மணி நேரத்திற்கும் மேலாக என்னை தடுத்துவைத்தனர். என் பிறந்த இடம் அருணாசலப் பிரதேசம் என்பதால், இது சீனப் பகுதி என்று கூறி, எனது இந்தியப் பாஸ்போர்ட் தவறானது (invalid) எனச் சொன்னார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
மேலும் தனது பதிவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு ஆகியோரை டேக் செய்திருந்தார். பின்னர், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்க, இந்திய வெளிவிவகார அமைச்சகம் (MEA), பிரதமர் அலுவலகம் (PMO), அருணாசலப் பிரதேச முதல்வர், மற்றும் வெளிவிவகார செயலர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக கூறினார்.
மேலும் ” இவ்வளவு நேரம் என்னைத் தொந்தரவு செய்தது மிகுந்த வேதனையானது. இந்திய குடிமக்களை, குறிப்பாக அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை தொந்தரவு செய்வதற்கான ஒரு உத்தரவாதமாக இதை சீன அரசு பயன்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என நினைக்கிறேன்… இறுதியாக இரவு 10.30 மணியளவில் அங்கு இருந்து என்னை வெளியேறச் செய்த இந்திய தூதரகக் குழுவுக்கு நான் மிகவும் நன்றி தெரிவிக்கிறேன்.” என்று தெரிவித்தார்..
எனினும் இந்திய அரசு இன்னும் தொங்டொக் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கவில்லை.
சீனாவின் அருணாசல பிரதேச கோரிக்கை
அருணாசலப் பிரதேசம் தென் திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சீனா அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 27 இடங்களுக்கு, அதில் 15 மலைகளும், 4 மலைவழித்தடங்களுக்கு புதிய சீன பெயர்கள் சூட்டியது. இந்தியா அதனை உடனடியாகவும் தெளிவாகவும் நிராகரித்து, அதை “தவறான செயல் என்றும் அர்த்தமற்றது என்றும் என்று கூறியது.
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சீனாவின் இதுபோன்ற முயற்சிகளை இந்திய அரசு “வெளிப்படையாக” நிராகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் “இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு பெயர் சூட்டுவதன் மூலம், சீனா தன் பழுதான மற்றும் அர்த்தமற்ற முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. செயற்கையான பெயரிடல்கள் எந்த விதத்திலும் உண்மையை மாற்ற முடியாது. இந்தியாவின் ஓர் அங்கமாக அருணாசலப் பிரதேசம் இருந்தது, இருக்கிறது, என்றும் இருக்கும்.. இந்தியாவின் ஓர் அங்கமும் பிரிக்க முடியாத பகுதியாகும்.” என்று கூறினார்..
Read More : நவம்பர் முடியப் போகுது.. இந்த 5 பணிகளை உடனே முடிச்சுடுங்க.. இல்லையெனில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்!



