மத்திய அரசு ரைட்ஸ் நிறுவனத்தில் 2025-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படிப்பு மட்டுமின்றி டிகிரி படிப்புகள், டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு தொழிற்பயிற்சி 1961 கீழ் 1 வருட பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வயது வரம்பு: விண்ணப்பதார்கள் 18 வயதை நிறைந்து இருக்க வேண்டும்.
தொழிற்பயிற்சி விவரம்:
பொறியியல் பட்டதாரிகள்: பொறியியல் பட்டதாரிகளுக்கான பிரிவில் சிவில், கட்டக்கலை, எலெக்ட்ரிக்கல், சிக்னல், மெக்கானிக்கல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகள் 110 இடங்கள் நிரப்பப்படுகிறது.
பொறியியல் அல்லாத பட்டதாரிகள்: பட்டதாரிகள் பிரிவில் நிதி மற்றும் ஹெச்.ஆர் பிரிவில் 36 இடங்கள் நிரப்பப்படுகிறது.
டிப்ளமோ தகுதி: டிப்ளமோ தகுதியின் கீழ் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், வேதியியல் பிரிவில் 36 இடங்கள் நிரப்பப்படுகிறது.
ஐடிஐ தகுதி: ஐடிஐ தகுதியின் கீழ் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் இதர பிரிவில் 49 இடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித்தகுதி:
- பொறியியல் பிரிவிற்கு மேல் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டபப்டிப்பு முடித்தவர்களாக விண்ணப்பிக்கலாம்..
- பொறியியல் அல்லாத இடங்களுக்கு BA/BBA/B.Com/B.Sc./BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- டிப்ளமோ மற்றும் ஐடிஐ பிரிவிற்கு மேல் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை:
- பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.14,000 உதவித்தொகையாக பயிற்சி கால வரை அளிக்கப்படும்.
- பொறியியல் அல்லாத பட்டதாரிகளுக்கும் மாதம் ரூ.14.,000 வழங்கப்படும்.
- டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.12,000 மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை கிடையாது. விண்ணப்பதார்கள் அவர்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஏற்கெனவே, தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது.
எப்படி விண்ணப்பிப்பது? ஆர்வமுள்ளவர்கள் https://nats.education.gov.in/student_type.php மற்றும் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளங்களின் வழியாக பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, https://apprentice.rites.com:444/ApprenticeForm என்ற இணைப்பில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.12.2025
Read more: தந்தூரி சிக்கன் சாப்பிடுவதால் புற்றுநோய் வருமா? ஆய்வில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!



