பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா, பெரும்பாலும் ‘பால்கான்களின் நொஸ்ட்ரடமஸ்’ என அழைக்கப்படுகிறார்.. அவரின் கணிப்புகள் மீண்டும் இணையத்தில் பரவி வருவதால் உலகளவில் மீண்டும் கவனம் பெறுகிறார்.
காலப்போக்கில், பாபா வங்கா பல முக்கிய உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது.. இளவரசி டயானா மரணம், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் மரணங்கள் ஆகியவை அடங்கும். அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான பாபா வங்கா கணிப்புகள் மீண்டும் வைரலாகி வருகிறது..
உலகளாவிய போருக்கு வழிவகுக்கும் மோதல்
2026-ல் உலகின் முக்கிய சக்திகளைக் குறிக்கும் பெரிய அளவிலான மோதல் தொடங்கும் என்றும் இது கண்டங்களைத் தாண்டிச் செல்லும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.. இதை பெரும்பாலும் மூன்றாவது உலகப் போர் என விளக்குகின்றனர். ஆனால் இந்த போர் பற்றிய விவரங்கள் தெளிவற்றவை, குறிப்பிட்ட நாடுகள் அல்லது துல்லியமான காலவரிசை பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை.
பூமியின் நிலப்பரப்பில் 8% வரை பாதிக்கும் இயற்கை பேரழிவுகள்
மற்றொரு பரவலாகச் சொல்லப்படும் கணிப்பு என்னவெனில், 7–8% நிலப்பரப்பை பாதிக்கும் கடுமையான நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் கடுமையான காலநிலை சம்பவங்கள் ஏற்படும் என பாபா வாங்ங்கா கணித்ததாகக் கூறுகின்றன. இந்த சதவீதம் மிகவும் குறிப்பிட்டதாக இருந்தாலும், இதை உறுதிப்படுத்தும் எந்த இயல்பான அல்லது மூலப்படியான ஆதாரமும் இல்லை.
செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் பெறும் காலம்
2026 முதல் AI மனிதர்களை மிஞ்சி, பெரிய தொழில்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை கட்டுப்படுத்தத் தொடங்கும் என பாபா வங்கா எச்சரித்ததாக கூறுகின்றன. இது நம் காலத்தின் தொழில்நுட்பப் பீதியுடன் ஒத்துப் போகிறது..
வேற்று கிரக உயிரினங்களுடன் முதல் தொடர்பு
இணையத்தில் பரவியுள்ள மிகவும் பரபரப்பான கணிப்புகளில் ஒன்று, 2026-ல் மனிதகுலம் வெளிக்கிரகவாசிகளை சந்திக்கும் என்றும், 3I/ATLAS எனப்படும் ஒரு பெரும் விண்கலம் நவம்பர் மாதத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் என்றும் கூறுகிறது. பாபா வங்கா இதுபோன்ற கணிப்புகளை செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை.
இருப்பினும், 2026-ல் ரஷ்யாவில் இருந்து ஒரு மிகச் சக்திவாய்ந்த நபர் சில நேரங்களில் “மாஸ்டர்” அல்லது உலகத் தலைவர் எனவும் அழைக்கப்படும் ஒருவர் — உலக மேடையில் முக்கியத்துவம் பெறுவார் என பாபா வங்கா கணித்துள்ளார்.. ஆனால் இந்த கணிப்பும் உறுதிப்படுத்தப்படாத கணிப்பாகவே உள்ளன..
உலகளாவிய நிதி சரிவு
சிலர், 2026-ல் உலகளவில் நாணய முறை செயலிழத்தல், திடீர் பணவீக்கம் மற்றும் வங்கித் துறையில் நிலைகுலைவு போன்றவற்றை உள்ளடக்கிய பெரும் பொருளாதார நெருக்கடி வரும் என பாபா வங்கா கணித்துள்ளார். இவை இன்றைய உலகில் உள்ள பொருளாதார அச்சங்களுடன் ஒத்துப்போகின்றன. ஆனால் இதைப் பற்றிய சரிபார்க்கக்கூடிய பதிவுகள் எதுவும் பாபா வாங்ங்காவுடன் நேரடியாக இணைக்கப்படவில்லை.
தங்கம் விலை
தங்கத்தின் விலையில் திடீர் மற்றும் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகளாவிய நிதிச் சிக்கலின் போது தங்கத்தின் மதிப்பு கூட குறைந்து போகலாம் எனவும் சொல்கின்றன. ஆனால் இதற்கும் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும், இந்தக் கூற்று இணையத்தில் மிகவும் பிரபலமாக தொடர்கிறது.
காலநிலை குழப்பம் மற்றும் சூழல் திருப்புமுனைகள்
2026-ல் முன்னெப்போதும் இல்லாத அளவிலான காலநிலை மாற்றங்கள்.. வெள்ளம், வறட்சி, மற்றும் சுற்றுச்சூழலை மாற்றக்கூடிய கடுமையான வானிலை ஏற்படும் என பாபா வங்கா எச்சரித்ததாக கூறப்படுகிறது. இவை அறிவியல் நிபுணர்கள் கூறும் எச்சரிக்கைகளுடன் ஒத்துப்போனாலும், பாபா வங்கா உடன் இணைந்த ஊகத்திற்கே அடிப்படையாக உள்ளது.
ஆசியா உலக அதிசக்தியாக மாறும்
2026-ல் உலக அதிகாரச் சமநிலையில் பெரிய மாற்றம் நடைபெறும்; குறிப்பாக ஆசியா அல்லது சீனாவின் உயர்வால் இது நிகழும் எனும் பரவலாகப் பகிரப்படுகிறது. இது எல்லைத் தகராறுகள் அல்லது செல்வாக்கு விரிவாக்கம் போன்றவற்றையும் குறிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும், இவை நேரடியாக பாபா வங்காவின் உறுதிப்படுத்தப்பட்ட கூற்றுகளிலிருந்து வந்தவை அல்ல..
பெருமளவு குடிபெயர்வு மற்றும் சமூக அதிருப்தி
கடைசியாக, 2026-ல் சூழல் நெருக்கடி, தானியங்கி தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலகளாவிய நிதி நெருக்கடி காரணமாக பெரிய அளவிலான குடிபெயர்வு, அரசியல் கலகம் மற்றும் சமூக மாற்றங்கள் ஏற்படும் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.. இது இன்று உலகம் எதிர்கொள்ளும் அச்சங்கள் மற்றும் நிச்சயமற்ற நிலையை பிரதிபலிப்பதாகும்; ஆனால் இது எவ்வித பதிவு செய்யப்பட்ட ஆதாரத்திலும் கிடைக்கவில்லை.
பாபா வங்கா யார்?
1911 ஆம் ஆண்டு பல்கேரியாவில், வங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா எனப் பிறந்த பாபா வங்கா, 12-ஆவது வயதில் ஏற்பட்ட கடும் புயலில் சிக்கியதால் தனது பார்வையை இழந்தார். அதன்பின்னரே அவருக்கு எதிர்காலத்தை பற்றி கணிக்கும் சக்தி அவருக்கு வந்ததாக கூறப்படுகிறது.. தன் காலத்தைத் தாண்டியும் பாபா வங்கா, 5079 ஆம் ஆண்டுவரை பல நிகழ்வுகளை கணித்துள்ளார் என்று கூறப்படுகிறது.. எனினும் அவர் கணித்த பல கணிப்புகள் உண்மையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..



