fbpx

உங்களுக்கும் பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறதா..? அப்படினா இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

அரசு அல்லது தனியார் ஊழியர்கள் யாராக இருந்தாலும் பணி செய்யும்போது அவர்களது வருமானத்தில் இருந்து பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுவது வழக்கம். ஊழியர்கள் தங்கள் பிஎஃப் தொகையை பணியின்போதோ அல்லது ஓய்வுபெற்ற பிறகு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. பணியின்போது ஊழியர்கள் பிஎஃப் தொகையை எடுக்க விரும்பினால், அதற்கு சில விதிமுறைகள் உண்டு.

அதன்படி, கல்வி, மருத்துவம், திருமணம், நிலம் வாங்குவது, வீட்டுக் கடன், வீடு சீரமைப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக மட்டுமே எடுக்க வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. எனவே, இதற்கு உட்பட்டு தான் ஒருவர் தனது பிஎஃப் தொகையை எடுக்க முடியும். EPF சந்தாதாரர் எதிர்பாராத சூழலில் தங்களது வேலையை இழந்துவிட்டால், டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 75% மட்டுமே திரும்ப பெற முடியும். 2 மாதங்களுக்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் மீதமுள்ள 25% தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

PF கணக்கில் இருந்து பணத்தை எடுக்க என்ன தேவை..?

* UAN எண்

* பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்

* ஆதார் எண்

* ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு

* பிஎஃப் பணத்தை எடுப்பதற்காக ஆவணங்கள்

PF கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி..?

* முதலில் EPFO e-SEWA போர்டலில் லாக் இன் செய்ய வேண்டும்

* பின்னர், பணத்தை பெற கிளைம் செக்சனுக்கு செல்ல வேண்டும்.

* அங்கு வங்கிக் கணக்கு விவரங்களை பதிவிட வேண்டும்.

* அடுத்து அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை கிளிக் செய்ய வேண்டும்.

* பின்னர் பணம் எடுப்பதற்கான காரணத்தை பதிவிட வேண்டும்.

* அதில் கேட்கப்படும் விவரங்களை மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* பின்னர் ஒடிபியை பதிவிட்டு சமர்பிக்க வேண்டும்.

* பிறகு பிஎஃப் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.

Chella

Next Post

நீங்கள் 18 வயதை கடந்துவிட்டீர்களா..? ஆதார் அட்டையில் வந்த புதிய மாற்றம்..!! மறந்துறாதீங்க..!!

Mon Dec 25 , 2023
இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் முதன்முறையாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது பாஸ்போர்ட் பாணியில் உடல் ரீதியான பரிசோதனை செய்யப்படும் என்று சமீபத்திய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். இந்தியாவில் ஆதார் அட்டை தனிநபர் அடையாள அட்டையாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல்வேறு விதமான அரசு சார்ந்த திட்டங்கள், வங்கிக் கணக்கு திறத்தல், சிம் கார்டு வாங்குதல் போன்ற விஷயங்களுக்கு ஆதார் எண் பயன்படுத்தப்பட்டு […]

You May Like