30 நாட்களில் தொப்பையை குறைக்கும் தினை அரிசி கஞ்சி..!! உடற்பயிற்சியே தேவையில்லை..!! உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும்.!!

Dhinai 2025

இன்றைய வேகமான உலகில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டுக்கோப்பான உடலைப் பராமரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் பணிச்சூழல், போதிய உடற்பயிற்சியின்மை, தூக்கமின்மை மற்றும் அதிக மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிப்பதும், தொப்பை போடுவதும் சாதாரணமாகிவிட்டது.


இதன் காரணமாக உடனடி தீர்வைக் கருதிப் பலர் சந்தைகளில் கிடைக்கும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதோடு, தேவையற்ற பக்க விளைவுகளையும் சந்திக்கின்றனர். எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல், தொப்பையைக் குறைத்து ஆரோக்கியமான உடலைப் பெற உதவும் எளிய உணவுத் தீர்வு குறித்து இங்கே பார்க்கலாம்.

தினை அரிசி கஞ்சி :

எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல், தொங்கும் தொப்பையைக் குறைத்து உடலைக் கட்டுக்கோப்பாக மாற்ற, தினை அரிசி மசாலா கஞ்சியைத் தயாரித்துக் குடிப்பது சிறந்த வழி. இதனைத் தொடர்ந்து 30 நாட்களுக்குப் பருகி வந்தால், தொப்பை குறைவதை நீங்களே கண்கூடாக உணர முடியும் என்று கூறப்படுகிறது. தினையில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் – 2 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கியது)

கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

புதினா இலைகள் – 10

மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி

திணை அரிசி – 1 கப்

தண்ணீர் – 5 கப்

உப்பு – சுவைக்கேற்ப

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

* முதலில் ஒரு கப் தினை அரிசியை எடுத்து, அதைத் தண்ணீரில் போட்டு சுமார் 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிச் சூடானதும், ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.

* பிறகு பொடியாக நறுக்கிய 5 சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, நிறம் மாறும் வரை (கண்ணாடி பதத்திற்கு) நன்கு வதக்க வேண்டும். அதில் நறுக்கிய ஒரு கேரட், ஒரு தக்காளி, 10 புதினா இலைகள் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அத்துடன் அரை தேக்கரண்டி மிளகுத் தூளையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* ஊறவைத்த தினை அரிசியைத் தண்ணீரில் கழுவி, அதை வதக்கிய கலவையுடன் சேர்த்து ஒருமுறை கிளறிவிடவும். பின்னர், 5 கப் தண்ணீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

* குக்கரை மூடி வைத்து, நான்கு விசில் வரும்வரை வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.

* குக்கர் ஆறியதும் திறந்து, மேலே சிறிதளவு கொத்தமல்லியைத் தூவி கிளறிப் பரிமாறினால், சுவையான மற்றும் ஆரோக்கியமான தினை அரிசி மசாலா கஞ்சி தயாராகிவிடும்.

இந்த கஞ்சியை தினமும் ஒரு வேளை உணவாக 30 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், தொப்பை குறைவதோடு, உடல் கட்டுக்கோப்புடன் ஆரோக்கியமாக இருக்கும்.

Read More : தெய்வங்கள் ஒன்று கூடிய திருத்தலம்..!! நெய் தீபம் ஏற்றினாலே போதும்.. வேண்டியது நிறைவேறும்..!! இந்த கோயில் எங்கிருக்கு தெரியுமா..?

CHELLA

Next Post

தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை... ரூ.10 லட்சம் பரிசு + விருது...! மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...!

Wed Nov 26 , 2025
2025 – 2026 ஆம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களால் 2022-2023 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) […]
manja pai 2025

You May Like