fbpx

பாலடைந்த பங்களாவுக்குள் எக்ஸ் காதலியை அழைத்துச் சென்ற இளைஞர்..!! கை, கால்களை கட்டிப்போட்டு வெறிச்செயல்..!!

சென்னையை அடுத்த தாழம்பூரில் பழைய பாலடைந்த பங்களாவில் கை, கல்கள் கட்டப்பட்ட நிலையில், பெண் ஒருவரின் உடல் எரித்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த தீவிர விசாரணையில், எரிந்து நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் நாவலூர் மப்பேடு பகுதிகள் வசித்து வந்த மதுரையைச் சேர்ந்த ஐடி ஊழியர் நந்தினி (25) என்பது தெரியவந்தது.

இவருடைய முன்னாள் காதலன் வெற்றி (28 வயது). இவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார். அவர் அளித்த வாக்குமூலத்தில், நந்தினியும், வெற்றியும் மதுரை கல்லூரியில் படிக்கும்போது ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். 5 ஆண்டுகளாக தொடர்ந்து இவர்களுடைய காதலில் வெற்றி தன் பாலின ஈர்ப்பாளர் என்பது நந்தினிக்கு தெரிய வர திருநங்கை என்று கூறி அவரை விட்டு விலகியுள்ளார். இருப்பினும் அதன் பிறகு நண்பர்களாக பழகி வந்துள்ளனர். தற்போது தனியார் ஐடி நிறுவனத்தில் பணி செய்து வந்த நந்தினி, ராகுல் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த வெற்றி, நந்தினியிடம் ராகுலிடம் பேசக்கூடாது என்று கூறியுள்ளார். ஆனால், கேட்காத நந்தினியை பிறந்த நாளுக்கு கோயிலுக்கு அழைத்து சென்று விட்டு சர்ப்ரைஸ் கிப்ட் தருவதாக கூறி பாலடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக சங்கிலியால் கட்டிப் போட்டுள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளார். பிறகு அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

பெருவெள்ளத்தால் நெல்லையில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு..? ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு..!!

Mon Dec 25 , 2023
நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களை அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் கடந்த வாரம் அதி கனமழை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஓராண்டு பெய்யும் சராசரி மழை அளவை விட கூடுதலாக ஒரே நாளில் பெய்ததால், தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதில், பலரும் தங்களது குடியிருப்புகளை இழந்து தவித்தனர். […]

You May Like