fbpx

தமிழ்நாட்டில் 12 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது..!! குடும்ப அட்டைதாரர்கள் ஷாக்..!!

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு 2024ஆம் ஆண்டில் 12 நாட்கள் பொதுவிடுமுறை தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் பொது விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் 24 நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த 24 பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் விடுமுறை என்பது வழங்கப்படும். இது அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு பொருந்தினாலும் கூட ரேஷன் கடைகளுக்கு ஆண்டுதோறும் தனியே பொது விடுமுறை தினம் என்பது அறிவிக்கப்படும்.

அதன்படி 2024ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொதுவிடுமுறை விடப்படும் நாட்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ் உள்பட 12 நாட்கள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் (ஜனவரி 15), தைப்பூசம் (ஜனவரி 25), குடியரசு தினம் (ஜனவரி 26), ரம்ஜான் (ஏப்ரல் 11), தமிழ் புத்தாண்டு/டாக்டர் பிஆர் அம்பேத்கர் பிறந்த தினம் (ஏப்ரல் 14) ஆகியவை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மே தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 7), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), விஜயதசமி (அக்டோபர் 12), தீபாவளி (அக்டோபர் 31), கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25) என மொத்தம் 12 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

டிச.26, 2004!… வாரி சுருட்டிய ஆழிப்பேரலை!… ஆண்டுகள் கடந்தாலும் இன்றளவும் மாறாத வடுக்களாய் தொடரும் நினைவுகள்!

Tue Dec 26 , 2023
2004ம் ஆண்டின் டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஆழிப்பேரலை தாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய சோக தினத்தின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடலோர மக்களுக்கு அலைகள் புதிதல்ல. அன்று வந்த அலையையும் சாதாரணமாகவே நினைத்தனர். ஆனால், லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 2004 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸின் மறுதினத்தை அவ்வளவு எளிதில் தமிழக நெய்தல்குடிகளால் மறக்க இயலாது. […]

You May Like