fbpx

#Just In | அனைத்து ரேஷன் கடைகளையும் உடனே திறங்க..!! 5 கிலோ அரிசி, துவரம் பருப்பு..!! முக்கிய உத்தரவு..!!

கடந்த 17, 18ஆம் தேதிகளில் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், 4 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் திறக்க வேண்டுமெனவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பரும்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகளுக்கு முன் தண்ணீர் தேங்கி இருந்தால், உடனே அகற்றவும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

100 எம்பிக்களின் ஆட்டம் முடிகிறது..!! இனி புதிய வேட்பாளர்கள்..!! பாஜக தலைமை எடுக்கப்போகும் முடிவு..!!

Tue Dec 26 , 2023
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்று மத்தியில் 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. ஆனால், பாஜகவின் வெற்றிக்கு தடை போட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ‛இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்துள்ளன. தற்போதைய சூழலில் தேசிய அரசியல் […]

You May Like