Big Breaking : தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை.. அரசு அறிவிப்பு..!

Rain 2025 1

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது..

டிட்வா புயல் எதிரொலியாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சில இடங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..


அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.. அந்த வகையில் கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.. அதே போல் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது..

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.. பள்ளிக்கல்வித்துறை காலண்டரில் நாளை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேலும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகளில் நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது..

Read More : சென்னையில் பேய் மழை பெய்யுமா? டிட்வா புயல் குறித்த 7 முக்கிய கேள்விகள்.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன பதில்கள்..!

RUPA

Next Post

பொள்ளாச்சி ஆனைமலையில் மனஅமைதி தரும் மாசாணியம்மன் கோயில்..! இத்தனை சிறப்புகளா..?

Sat Nov 29 , 2025
Is the Masani Amman Temple in Pollachi's Anaimalai Hill so special?
masani amman

You May Like