Breaking : ஷாக் நியூஸ்..! ஒரே நாளில் அதிரடி உயர்வு; ரூ.96,000ஐ நெருங்கிய தங்கம் விலை; வெள்ளி விலையும் தாறுமாறு உயர்வு!

jewels nn

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு விலை ரூ.1,120 உயர்ந்து, ரூ.95,840 செய்யப்படுகிறது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.140 உயர்ந்து, 11,980க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு விலை ரூ.1,120 உயர்ந்து, ரூ.95,840 செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.9 உயர்ந்து, ரூ.192க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : Flash : டிட்வா புயலின் வேகம் அதிகரிப்பு.. இன்று எங்கெல்லாம் பேய் மழை பெய்யும்?

RUPA

Next Post

காலையில் எழுந்ததும் தொண்டை வறண்டு இருக்கிறதா? உங்களுக்கு இந்த நோய் இருக்கலாம்!

Sat Nov 29 , 2025
சில நேரங்களில், காலையில் தூங்கி எழுந்த உடன் தொண்டை வலி அல்லது வறண்ட தொண்டை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது எப்போதாவது நடந்தால், அதிகம் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் அது அடிக்கடி நடந்தால், கவனம் செலுத்துவது அவசியம்… உங்கள் தொண்டை வறண்டிருந்தால், உங்கள் உடலில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். தூக்கப் பழக்கம், அறையில் காற்றின் தரம் மற்றும் உட்புற உடல் பிரச்சினைகள் உங்கள் தொண்டை ஆரோக்கியத்தை பாதிக்கலாம். […]
throat pain

You May Like