தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் இலங்கைக்கு கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென் கிழக்கே 280 கி.மீ தொலைவிலும் வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த புயல் இன்று நள்ளிரவு தொடங்கி நாளை மாலை வரை தமிழக கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் இந்த புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்ரு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
நாளை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.. விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. வரும் 1-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
Read More : Breaking : 13 வீடுகளில் கொள்ளை.. கோவையில் 3 பேர் சுட்டுப்பிடிப்பு..! காவல்துறையினர் அதிரடி..!



